Menu
Your Cart

வசை மண்

வசை மண்
-5 %
வசை மண்
₹371
₹390
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பூமிக்கு மேலே முடிந்துபோன வாழ்க்கையின் சச்சரவுகள் கூடுதல் தீவிரத்துடன் பூமிக்குக் கீழேயும் தொடர்கின்றன. ஓரிருவர் தவிர மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் மரித்தவர்கள்தாம். ஏமாற்றமும் அவமானமும் பொறாமையும் பூசலும் நிரம்பிய கொந்தளிப்பான ஒரு பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது நாவல். கவித்துவமும் துள்ளலும் ஒரு முனையில், வசையும் கொச்சையும் மறு முனையில் என்ற உயிரோசை கொண்டது நாவலின் மொழி. ஒரு சிறு நகரத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை அவற்றைக் கடந்த பெரிய உலகத்தின் உயிர்த்துடிப்புள்ள சித்திரமாக விரிக்கிறது நாவலாசிரியரின் கலை விகாசம். சிறுகதைகளும் வேறு இரண்டு நாவல்களும் எழுதியுள்ள மார்ட்டீன் ஓ’ கைனின் சில படைப்புகள் அவருடைய மறைவுக்குப் பின்பே வெளியாயின. நார்வேஜியன், டேனிஷ், ஜெர்மன், பிரெஞ்சு, செக் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள ‘வசை மண்’ இந்திய மொழிகளில் தமிழில்தான் முதலில் வெளியாகிறது.
Book Details
Book Title வசை மண் (Vasai Mann)
Author மார்ட்டீன் ஓ’ கைன் (Maartteen O' Kain)
Translator ஆர்.சிவகுமார் (R.Sivakumar)
ISBN 9789386820655
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலை யோசிக்கும் அந்த நொடியிலிருந்து சோஃபியின் உலகம் வேறாகிறது. காலங்காலமாக சிந்திக்கும் மனிதர்கள் கேட்கும் கேள்விக..
₹751 ₹790
இலக்கியக் கோட்பாடு சர்ச்சைக்குரிய ஒரு விவாதப் பொருள். இது கடந்த இருபது ஆண்டுகளில் கலாசாரம், சமூகம் பற்றிய ஆய்வை மாற்றத்துக்கு உள்ளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. பேரிலக்கியப் போற்றுதலை ஊக்குவிப்பதைவிடக் கலாசார விளைபொருள்களான அரசியல், உளவியல் தொனிப் பொருள்கள் குறித்த சந்தேகத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம..
₹114 ₹120
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின் முதலாவது நாவல், அவர்களது வாழ்வனுபவங்களின் குறிப்பாக, அவர்களுடைய தனி ஆளுமை உருவாகும் பருவத்தின் நினைவுகளை மீளப் பார்ப்ப..
₹181 ₹190
துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான பணமின்மையும் அலைக்கழிக்க, போதமின்றித் தெருக்களில் திரியும் தனியனான ஒருவனின் இரண்டுநாள் கதையே இந்தக் குறுநாவல். அவற்றின் போக்கில் இழுத்துப் போகப்பட சம்பவங்களிடம் தன்னை ஒப்புக்கொடுத்த அவனை ஆன்மீக வெளிப்பாடு..
₹152 ₹160