Menu
Your Cart

மக்களாட்சியின் மனசாட்சி

மக்களாட்சியின் மனசாட்சி
-5 % Out Of Stock
மக்களாட்சியின் மனசாட்சி
ரவிக்குமார் (ஆசிரியர்)
₹428
₹450
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எழுத்தாளர் ரவிக்குமாரின் இந்தக் கட்டுரை திரட்டு உலக அளவிலான சமூக, அரசியல் பொருளாதாரம், பண்பாடு மற்றும் வாழ்வியலின் உட்கூறுகளை ஒரு பரந்துபட்ட பார்வையுடன் நம்முன் படைக்கிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து தொல்குடிகளான நரிக்குறவர்களின் வாழ்வியல் மற்றும் அதன் சிக்கல்கள் வரை தன் தனித்துவமான மொழி ஆளுமையின் மூலம் அவர் எழுதியுள்ளார். இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பல இன்றைய சூழ்நிலைக்கும் ஏற்புடையதாக அன்றே அவரால் படைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் நுணுக்கமாகவும், ஆழ்ந்த புரிதலுடனும், நல்ல பல வரலாற்று, சமூகத் தரவுகளை மையமாகக்கொண்டும் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் அன்றைய காலகட்டத்தில் நடந்தேறிய முக்கிய நிகழ்வுகளின் காலப் பெட்டகமாகவும் இருக்கின்றன. ரவிக்குமாருக்கு அழகியல், இலக்கியம், மொழி, பண்பாடு ஆகியவற்றின்மேல் உள்ள ஆளுமை என்பது நிறப்பிரிகை காலந்தொட்டு அவரிடம் தொடர்ந்து இருந்துவந்துள்ளது. இதை அவரின் எழுத்துகளைப் பின்தொடர்பவர்கள் இன்றைய பின் நவீனத்துவ காலகட்டத்திலும் உணரலாம். அவரின் இந்த நீண்ட நெடிய இலக்கியப் பயணத்தில் காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்ட பல பிம்பங்களை உடைத்ததாக இருக்கட்டும்; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுமுறையைச் செவ்வியல் தளத்திற்கு நகர்த்தியதாகட்டும் ரவிக்குமாரின் ஆளுமை தமிழ் மொழிக்கும் அதன் இலக்கியத்திற்கும் ஒரு புதிய பரிணாமத்தை, வளத்தைக் கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எதையும் ஆழ்ந்து வாசித்து, சிலாகித்து, சிந்தித்து தரவுகளின் அடிப்படையில் படைக்கும் போது காலம் கடந்து நிலைக்கும் படைப்பாக அது மாறிவிடுகிறது. ரவிக்குமாரின் இந்தத் தொகுப்பும் அதுபோன்ற ஒன்றுதான்.
Book Details
Book Title மக்களாட்சியின் மனசாட்சி (makalatchiyin manasatchi)
Author ரவிக்குமார் (Ravikumar)
Publisher மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனிதப்படுத்தப்பட்ட நம்பிக்கை கேள்விக்கும், விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டதாகிறது. அதனைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதன் தனது பகுதியாக அதை ஆக்கிக்கொள்கிறான். சாதி-அப்படியான நம்பிக்கைகளுள் ஒன்று. நியாயமோ, தர்க்கமோ, ஆதாரங்களோ அற்ற அந்தப் புனித நம்பிக்கையை அதனால் நசுக்கப்படும் ஒ..
₹95 ₹100
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பி..
₹109 ₹115
கல்விச் சிந்தனைகள் அம்பேத்கர்..
₹76 ₹80
கானலால் நிறையும் காவிரி - உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பு குறித்த ஒரு விமர்சனப் பார்வை :காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், காவிரிக்கும் தமிழகத்திற்குமான தொன்மையைப் பறைச்சாற்றும் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் காவிரி குறித்த பதிவுகள் தொடங்கி, காவ..
₹114 ₹120