-5 %
ரோவெல் தெரு மனிதர்கள்
உமா கதிர் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹209
₹220
- Edition: 01
- Year: 2022
- ISBN: 9789390884445
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வாழ்வனுபவத்தையும் வாசிப்பனுபவத்தையும் ஒருசேர அணைத்துச் செல்லும் சிறுகதைகள். வாழ்க்கை அனுபவக் கதைகள் சிறந்த வாசிப்பனுபவத்தைக் கொடுக்கக் கூடியவைதான் ஆனால் புனைவின் களத்தில், நடக்கச் சாத்தியமுள்ளவற்றில் உமா கதிர் வெளிச்சம் பாய்ச்சி அதை இலக்கியமாக்கி விடுகிறார். அந்த வகையில் இது யதார்த்த அல்லது புனைவு படைப்புகள் என்பதைவிட இது உமா கதிரின் கதைகள் என்று
சொல்லலாம். ஒவ்வொரு கதை முடிவும் ஆழமான தத்துவ விசாரணையை வாசகர்களுக்கு ஏற்படுத்துவது
உமா கதிரின் மாஸ்டர் டச்.
- ஷானவாஸ்
ஒரு நாட்டில் வசித்தால் மட்டும் அந்த நாட்டின் புனைவுக்கான ஆன்மாவைக் கண்டடைந்துவிட முடியாது. எந்தவொரு புனைவும் மைய ஓட்டத்தில் இணைந்து நடப்பதில்லை. வாழ்வின் இருண்மைகளில் ஏதோ ஒரு சொட்டு கூடுதலாக அல்லது குறைவாக தவறி விழும்போது அங்கு புனைவு எழுந்துவருகிறது. உமா கதிரின் சிறுகதைகள் அத்தகைய ஆன்மாக்களைக் கண்டுகொள்கின்றன. அவைகளை நம் பார்வைக்கு இழுத்து வருகின்றன. இவைகளையும் கொஞ்சம் பாருங்களேன் என்று மைய ஓட்டத்திற்கு அறிமுகம் செய்கின்றன. உண்மையில் ஒரு படைப்பின் அல்லது படைப்பாளனின் ஆன்மா அதுதான். ஒரு துலக்கம்
அல்லது வாழ்வின் முரணை அடையாளப்படுத்துவது. அவ்வகையில் உமா கதிரின் படைப்புகள் நம் மனதைக் கவர்கின்றன
- எம்.கே. குமார்
Book Details | |
Book Title | ரோவெல் தெரு மனிதர்கள் (Rowell Theru Manidhargal) |
Author | உமா கதிர் |
Publisher | எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing) |
Published On | Jun 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |