- Year: 2018
- Page: 88
- Language: தமிழ்
- Publisher: வானம் பதிப்பகம்
மரப்பாச்சி சொன்ன ரகசியம்:
செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்கள் தான் இந்நூல்.
சுற்றுச் சூழல் பற்றிய புரிதலை மிக எளிமையாகச் சொன்ன பாலபாரதியின் சிறுவர் நூலான ‘ஆமை காட்டிய அற்புத உலகம்‘ போல், மரப்பாச்சியும் மிக மிக முக்கியமான சமூக விஷயமொன்றைத் தொடுகிறது. பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பாற்ற தொடுதல் (Good touch, Bad touch) பற்றி மிக எளிமையானதொரு புரிதலை ஒரு கதையின் மூலம் உருவாக்குகிறது. நல்ல, கெட்ட என்ற சொல்லுக்கு மாற்றாக பாதுகாப்பான, பாதுகாப்பாற்ற எனும் சொற்களைப் பாலபாரதி பயன்படுத்தியுள்ளது சிறப்பாய் உள்ளது. தனக்கு நேருவதைப் பெற்றோர்களிடம் சொல்லவே பூஜா தயங்கும் பொழுது, மரப்பாச்சிப் பொம்மை அவளுக்கு க்யூட்டாய் உதவுகிறது. உதவுவதோடு அல்லாமல், மரப்பாச்சியான செஞ்சந்தன இளவரசி பூஜாவிற்காகச் செய்யும் சாகசம் அட்டகாசமாய் உள்ளது. இளவரசியின் சாகசம் அதோடு முடிவதில்லை. பள்ளியில், ஷாலு கையில் இருந்து மரப்பாச்சியைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் சேட்டைக்கார நேத்ராவையும் மரப்பாச்சி படாதபாடு படுத்துகிறது.
நீங்கள் கையில் வைத்திருக்கும் பொம்மை, உங்களை உண்மையை மட்டும் பேச வைத்தால் என்னாகும்? நேத்ராவிடம் கேளுங்கள். கடைசி அத்தியாயத்தில், சூர்யா அறிமுகமாகிறான். பாலபாரதியின் நூலான சுண்டைக்காய் இளவரசன் நூலில் பிரதான பாத்திரம் அவன். பூஜாவின் அத்தியாயத்தோடு நாவல் முழுமையடைந்து விடுவதால், சூர்யாவின் அத்தியாயத்தில் சுவாரசியம் கொஞ்சம் குறைகிறது என்றே சொல்லவேண்டும். ஆனால், வருத்தத்தில் இருக்கும் ஷாலினிக்குஅதிலிருந்து மீள அவன் சொல்லும் ஓர் அற்புதமான ரகசியத்தோடு இந்நூல் நிறைவடைவது சிறப்பு.
Book Details | |
Book Title | மரப்பாச்சி சொன்ன ரகசியம் (PB) (Marappaachchi Sonna Ragasiyam Pb) |
Author | யெஸ்.பாலபாரதி (S.Balabharathi) |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 88 |
Year | 2018 |
Category | Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், சிறுவர் கதை |