Menu
Your Cart

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை
-5 % Out Of Stock
கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை
S.சந்திரமௌலி (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
"நான் தலையங்கம் படிப்பதற்காகவே வாங்குகிறேன்." "நான் தில்லானா மோகானாம்பாள் தொடர்கதைக்காக." "நாங்க வாங்கறது அதுல வர்ற பயணக் கட்டுரை, ஆன்மிக தகவலுக்காக." "நாங்களா.. பளிச்னு சொல்லணும்னா கோபுலுவுக்காக!" கடைசி பதிலுக்குச் சொந்தமானவரின் வாழ்க்கை அனுபவ நூல் இது. விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு. சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம். ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூடச் சொல்லலாம். ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்!
Book Details
Book Title கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை (Gopulu : Kodugalal Oru Vaazhkai)
Author S.சந்திரமௌலி (S.Chandramouli)
ISBN 9788183689083
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 112
Published On

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகெங்கும் இருக்கும் சீடர்களையும் அன்பர்களையும் கணக்கிட்டால், எந்தக் காலத்திலும் வேறெந்த துறவிக்கும் இல்லாத அளவுக்கு சிஷ்யர்களைப் பெற்றிருப்பவர் மாதா அமிர்தானந்த மயி. வெறும் ஆன்மிகச் சொற்பொழிவுகளோடு நின்றுவிடாமல் ஏராளமான அறக்கட்டளை கள் அமைத்து, கல்விப்பணியிலும் சமுதாயப் பணிகளிலும் தமது ஆன்மிக இயக்கத..
₹57 ₹60
இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான், இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக கம்பீரமாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக் கதை. உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த ஜப்பான், அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பலியானது. தாக்குதல் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, ஜப்பானி..
₹238 ₹250
திரைப்படத்துக்கு வெளியே நாகேஷ் நடித்ததில்லை. மனம் திறந்து அதிகம் பேசியதும் இல்லை. உடன் நடித்தவர்கள் பற்றியும், இயக்கியவர்கள் பற்றியும், திரைப்பட அனுபவங்கள் பற்றியும் அவர் இதுவரை பகிர்ந்துகொண்ட விஷயங்கள் சொற்பமே. அவையும்கூட அவர் துறையைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறதே தவிர, அவரைப் புரிந்துகொள்ள அல்ல. ..
₹261 ₹275