-5 %
Out Of Stock
இறுதி சுவாசம்
₹190
₹200
- Year: 2017
- Page: 325
- Language: தமிழ்
- Publisher: வம்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஸ்பெயின் நாட்டு இயக்குநரான லூயி புனுவலின் சுயசரிதம். வயது ஆக ஆக நம் நினைவில் இருந்து பல சம்பவங்கள் தப்பிப் போவதையும் சிறுபிராயத்தில் நெருங்கிப் பழகிய நண்பனின் பெயரே மறந்துபோகும் துயரையும் குறித்துப் பேசுவதில் தொடங்குகிறது முதல் அத்தியாயம். சுயசரிதமாக இருந்தாலும் மழை பெய்வதற்காக பாதிரியார்களால் ஸ்பெயினில் நடத்தப்படும் ஊர்வலம், குழந்தை பிறந்தால் அறிவிப்பதற்கு என்றே சர்ச்சில் கட்டப்பட்டு இருக்கும் வெண்கல மணி, ஆலிவ் எண்ணெய், கிராமப்புற மனிதர்களின் வித்தியாசமான நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஆகியவையும் பதியப்பட்டு இருப்பது ரசனை வாசிப்பனுபவம். சர்ரியலிசம் எனப்படும் கலைக்கோட்பாடு குறித்த விரிவான அறிமுகமும் ஊடாகக் கடக்கிறது. ஸ்பெயின் நாட்டவரான லூயி புனுவல் மெக்ஸிகோ, பாரிஸ், நியூயார்க் என 36 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு, கண்களில் நீர்பனிக்க மேட்ரிட் திரும்புகிறார். மிகை யதார்த்தவாத நன்பர்களான டாலி, பிரெட்டன், மேக்ஸ் எர்னெஸ்ட், பால் எலுவர்ட் ஆகியோரின் ஆளுமைகளை விவரிக்கும் இச்சுயசரிதம் புரட்சிகரமானதும், கவிதாபூர்வமானதும் தார்மீகமானதுமாகும். ஃபிரிட்ஸ் லாங் என்னும் திரைப்பட இயக்குனரை ஆதர்ஸமாகக் கொண்டிருந்த புனுவல் The Milky Way, The Discreet Charm of the Bourgeoise, The Phantom of Liberty போன்ற சீரிய படங்களை உருவாக்கியவர்
Book Details | |
Book Title | இறுதி சுவாசம் (Iruthi Suvasam) |
Author | லூயி புனுவல் (Louie Punuval) |
Translator | சா.தேவதாஸ் (S. Devadas) |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 325 |
Published On | Dec 2009 |
Year | 2017 |
Category | Translation | மொழிபெயர்ப்பு |