Menu
Your Cart

மாலிக்காபூர்

மாலிக்காபூர்
-5 % Available
மாலிக்காபூர்
செ.திவான் (ஆசிரியர்)
₹76
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
காலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறைசாற்றும் சரித்திர வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது என்பதற்கு, மாவீரன் மாலிக்காபூரின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் ஓர் அடிமை அரசன்தான் மாலிக்காபூர். சமூகக் குற்றவாளியாக, கொடூரனாக, மத நல்லிணக்கத்தை மிதித்தவனாக மாலிக்காபூரை பலரும் சொல்வது உண்டு. தென்னகப் படையெடுப்பு நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் சரித்திர ஆசிரியர்கள் சிலர், அவரைக் கொள்ளைக்காரனைப்போல் சித்திரித்தும், தென்னாட்டையே துவம்சம் செய்துவிட்டதுபோலவும் சொல்கிறார்கள். 1296 முதல் 1316 வரை வாழ்ந்து வரலாறு படைத்த மாலிக்காபூரின் ஆட்சித் திறனையும், போர் புரியும் வேகத்தையும், பல்வேறு விதமான அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து வெளிவந்த நிகழ்வுகளையும் இந்த நூலில் ஆணித்தரமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். மேலும், சமூகப் பிரிவுகள், மத நல்லிணக்கக் கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகளையும் விமர்சித்து வெளியான பல்வேறு நூல்களின் முரண்பாடான பதிவுகளையும் சுவாரஸ்யமாகத் தொகுத்துள்ளார் நூலாசிரியர் திவான். வரலாற்று நிஜங்களை முற்றிலுமாக படித்து உணர வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை அழகாகக் கூறும் அற்புத நூல்களில் இதுவும் ஒன்று.
Book Details
Book Title மாலிக்காபூர் (Maalikapoor)
Author செ.திவான் (S.Diwan)
ISBN 9788184764789
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன..
₹665 ₹700
இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல். தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் என்ற இந்த நூலில் எந்தெ..
₹119 ₹125