-5 %
ஒற்றை மார்பு
எஸ்.கே.முருகன் (ஆசிரியர்)
₹166
₹175
- Year: 2015
- ISBN: 9789383067268
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அய்யாவின் மகன் ‘டேய் கந்தா…’ என்று கூப்பிடும் எட்டு வயது முதலாளியின் மகனுக்கு முன்னே புன்னகை மாறாமல், ‘சொல்லுங்க சின்ன முதலாளி’ என்று அடிமை பூதமாக சேவகம் புரியும் அய்யா, வீட்டுக்கு வந்துவிட்டால் சர்வாதிகார சவுக்கு எடுத்துவிடுவார். ‘ஒரு சின்னப்பய என்னை டேய்ன்னு கூப்பிடுறான், அவங்கப்பனும் சிரிச்சுக்கிட்டே நிக்கிறான்…’ என்று கடைத்தெருவில் கிடைத்த அவமானங்களுக்காக அம்மாவை அடிப்பார். நல்லவேளையாக, அய்யாவிடம் வாங்கியதை அம்மா என்னிடம் கொட்டியதில்லை. அதனால்தான் அத்தக்கூலியாக வாழ்வதற்கே எத்தனை வேடம் போடவேண்டியிருக்கிறது என்று அய்யாவை படிக்கத் தொடங்கினேன். அன்று தொடங்கிய மனித பாடம் இன்றுவரை தொடர்கிறது. ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரக்கணக்கான கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அம்மாவின் கண்ணீரை நிறையவே பார்த்துவிட்டதால், என்னுடைய கதை படிப்பவர்களை கண்ணீர் சிந்தவிடுவதில்லை. வெயிலும் வெயில் சார்ந்த பிரதேசமான விருதுநகரில் நான் படித்த மனிதர்கள்தான் இந்தப் புத்தகத்தில் நிரம்பி வழிகிறார்கள். வெக்கை பூமி என்பதால் உழைப்பிலும் உணவிலும் காட்டும் ரசனையை எங்கள் மக்கள் கலைகளின் மீது காட்டுவதில்லை. ஆனால் காதல் மட்டும் பாறைகளையும் துளைத்து முளைத்தே விடுகிறது. அதனால்தான் என்னுடைய கதைகளில் காதல் காற்று அதிகமாகவே வீசுகிறது. ஆனந்த விகடன் பத்திரிகையில், ‘மந்திரச் சொல்’ மூலம் தொடங்கிய எழுத்தாளர் பயணத்தின் 12-வது முக்கியமான பதிவு இது. - எஸ்.கே.முருகன்
Book Details | |
Book Title | ஒற்றை மார்பு (Otrai Maarbu) |
Author | எஸ்.கே.முருகன் (S.K.Murugan) |
ISBN | 9789383067268 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 216 |
Year | 2015 |