- Edition: 1
- Year: 2014
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மலைகள்
சொல்ல மறந்த கதைகள்
இலங்கையில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் இரு முறை தேசிய சாகித்திய விருதுகளைப்பெற்றவர். வீரகேசரி நாளேட்டில் பணியாற்றியுள்ள முருகபூபதி 1987 முதல் அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், நீர்கொழும்பு இலக்கிய வட்டம் ஆகியனவற்றில் இணைந்து இயங்கிய முருகபூபதி, அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம், சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் ஆகியனவற்ரை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம் முதலான துறைகளில் நூல்களை எழுதியிருப்பவர். அத்துடன் சில நூல்கள், மலர்களின் தொகுப்பாசிரியருமாவார்.
கலை, இலக்கிய சமூகப்பணிகளுக்காக அவுஸ்திரேலியாவில் சில பொது அமைப்புகளின் பாராட்டு விருதுகளையும் அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநில பல்லின கலாசார ஆணையத்தின் விருது, பெறபின் மாநகர சபையின் சிறந்த பிரஜைக்கான விருது என்பனவற்றையும் பெற்றுள்ளார்.
எஸ்.கிருஷ்ணமூர்த்தி
அவுஸ்திரேலியா
Book Details | |
Book Title | சொல்ல மறந்த கதைகள் (Solla Marantha Kathaikal) |
Author | ச.முருகபூபதி (S. Murugaboopathy) |
Publisher | மலைகள் (Malaigal) |
Pages | 176 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |