-5 %
சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
₹90
₹95
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789355231444
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும்.
பெருமாள்முருகன்
இந்தியச் சாதி முறை தனித்துவமான ஒரு சமூக வடிவம். அதன் தோற்றம், நிலைபேறு, மாற்றம் ஆகியவை பற்றி அனைத்திந்தியத் தளத்தில் வைத்துப் பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் சுரிந்தர் ஜோத்கா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர்.
சாதியின் புறநிலை இயங்கியல் காலகதியில் மாறிவந்தாலும், அதன் அடிநிலைக் கருத்தியல் தளம் அந்த அளவிற்கு மாறவில்லை. இதனைப் பண்டைக் காலம், காலனியக் காலம், பின்காலனியக் காலம் ஆகியவற்றினூடாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.
சாதி பற்றிய செவ்வியல் நூல்களின் பார்வை, கீழைத்தேயவியல் பார்வை, கோட்பாட்டு விவாதங்கள், கல்விப் புலங்களின் அணுகுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பார்வையை முன்வைக்கிறார் சுரிந்தர் ஜோத்கா.
Book Details | |
Book Title | சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம் (Saathi) |
Author | சுரிந்தர் எஸ்.ஜோத்கா |
Translator | பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi) |
ISBN | 9789355231444 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 136 |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2023 New Arrivals |