Menu
Your Cart

சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு

 சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு
Out Of Stock
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு
ரங்கநாயகம்மா (ஆசிரியர்), கொற்றவை (தமிழில்)
₹80
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

சாதிய பிரச்சினைக்கு தீர்வு

செல்ல வேண்டிய பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய சக்திவாய்ந்த சித்தாந்தமே இவ்வுலகிற்குத் தேவைப்படுகிறது.அந்த சித்தாந்தவாதி புத்தராகவோ,கார்ல் மார்க்ஸாகவோ,அம்பேத்காராகவோ அல்லது வேறு யாரேனும் ஒருவராக இருக்கலாம்.நோயை எது குணப்படுத்துகிறதோ அதுவே மருந்து! மனிதர்களுக்கு துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றுத்தரக்கூடிய பாதையே உயரிய பாதையாக இருக்க முடியும்.பௌத்தம் அத்தகைய பாதையாக இருப்பின் அதனை நாம் மதிக்கவும்,பின்பற்றவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.இருப்பினும் இங்கு பிரச்சனைகள் என்னவெனில்,எது உயரிய பாதை என்பதை கண்டறிவதேயாகும்!விடுதலை வேண்டும் எனில் அப்படி கண்டறியும் அந்த உரிய பாதையை பின்பற்றுவதே சரியானதாக இருக்க முடியும்.

உலகில் நாம் ஏதேனும் ஆசிரியர்,தத்துவவாதி அல்லது சித்தாந்தவாதிகளை அறிய நேரும்போது உற்பத்தி உறவுகள் (உழைப்புசார் உறவுகள்),சொத்துடைமை,செல்வம் மற்றும் ஏழ்மை குறித்தெல்லாம் அவர்களின் போதனைகள் என்ன கூறுகின்றன என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.அவர்கள் எந்த மக்களின் பக்கம் நிற்கின்றனர் என்பதை அதன் மூலம் கண்டறிய வேண்டும்.இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால்,சமூகத்தில் நாம் எதையும் புரிந்து கொள்ள முடியாது.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.

ஒரு ஆசிரியர் அல்லது தலைவர் சொல்லும் போதனைகளில் சரியானவற்றை எடுத்துக்கொண்டு,தவறானவற்றை நாம் நிராகரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.சரியையும் தவறையும் ஒன்று போல் பாவிக்க தேவையில்லை.அது காதலோ அல்லது மரியாதையோ,எதையும் நாம் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.





Book Details
Book Title சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (saathiyapirachanaikku thirvu)
Author ரங்கநாயகம்மா (ranganayagamma)
Translator கொற்றவை (kotravai)
Publisher குறளி பதிப்பகம் (kurali pathippagam)
Pages 416
Year 2016
Edition 1
Category Politics| அரசியல், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

  உழைக்கும் மகளிர் - (தமிழில்  - கொற்றவை)..
₹67 ₹70
நவீனக் காட்டுமிராண்டித்தனத்தின் வெற்றிகர முன்னேற்றம் அதன் எல்லையை அடைந்தே தீரும், அப்போது சமூக முன்னேற்றம் மற்றும் மானுட விடுதலைக்கான ஒரு இயக்கம் மீண்டும் புதிதாக தனது பாதையைத் தொடங்கும். மானுட விடுதலைக்கான அந்த இறுதிப் போரில் வெற்றியாளர்கள் ரோசா லுக்சம்பர்க் விதைத்த அந்த விதையிலிருந்து கிளம்புவர்...
₹333 ₹350
குழந்தைகள் அறிவியல் உண்மைகளைக் கண்டடைய வேண்டும். நாம் வாழும் உலகம் பற்றி, இயற்கை பற்றி, எல்லாவற்றையும் பற்றி ஆதாரங்களுடன் விளக்குவது அறிவியல் ஆகும். இயற்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஒருவர் படிக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மருத்துவ விஞ்ஞானத்தை அனைவரும் படிப்பது அவசியமில்லை. அன்றாட வாழ்விற்க..
₹180