-5 %
Out Of Stock
சகுனியின் தாயம் (த்ரில்லர் நாவல்)
கே.என்.சிவராமன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹190
₹200
- Edition: 1
- Year: 2017
- Page: 362
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சூரியன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத நிகழ்வுகளும் திருப்பங்களும் நிறைந்த வாழ்க்கைதான் ரசிக்க முடிவதாக இருக்கிறது. அதனால்தான் மர்மக் கதைகளுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. ‘சகுனியின் தாயம்’ அப்படியான ரகத்தில் ஒரு வித்தியாசமான புதிய முயற்சி. தமிழகமெங்கும் பெரிய பெரிய போஸ்டர்கள், பெரிய அளவில் ‘தினகரன்’ நாளிதழில் விளம்பரங்கள் என ஒரு வெற்றிப்பட சினிமாவுக்கு நிகரான ஆரவாரத்துடன் தொடர்கதையாக இது ‘குங்குமம்’ வார இதழில் வெளியானபோது பத்திரிகையுலகிலும், வாசகர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், இது த்ரீ இன் ஒன் தொடர். ஒரு கதை இக்காலத்தில் நிகழ்வது. இன்னொன்று, பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் இளமைக்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சரித்திரம். மூன்றாவதோ, முற்றிலும் மாறுபட்ட மாயாஜாலக் கதை.
இறுதி வரை எங்குமே இணையாத இந்த மூன்று கதைகளும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வெளியானது. இது தவிர அவ்வப்போது மகாபாரத காலகட்டத்து நிகழ்வும் வந்து போகும். தமிழக தொடர்கதை வரலாற்றில் இதற்கு முன் இதுபோல் எந்த எழுத்தாளரும் மூன்று தனித்தனி ஜானர்களை ஒரே தொடராக எழுதியதில்லை. எப்படி வெகுஜன வார இதழ்களில் தொடர்கதைகளே இல்லாமல் போனபோது, அதற்கு ‘கர்ணனின் கவசம்’ தொடர் வழியாக ‘குங்குமம்’ மீண்டும் உயிர்கொடுத்ததோ, அப்படி ‘சகுனியின் தாயம்’ வழியாக இந்த வித்தியாசமான புதிய முயற்சிக்கும் ‘குங்குமம்’ பத்திரிகையே வித்திட்டிருக்கிறது. வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இந்த தொடர், நூலாகவும் பெரும் வெற்றி பெற்றது. கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு கீழே வைக்கத் தூண்டும் அனுபவத்தைத் தரும். எதிர்பாராத நிகழ்வுகளும் திருப்பங்களும் நிறைந்த வாழ்க்கைதான் ரசிக்க முடிவதாக இருக்கிறது. அதனால்தான் மர்மக் கதைகளுக்கு உலகின் எல்லா மொழிகளிலும் பெரும் வரவேற்பு கிடைக்கிறது. ‘சகுனியின் தாயம்’ அப்படியான ரகத்தில் ஒரு வித்தியாசமான புதிய முயற்சி. தமிழகமெங்கும் பெரிய பெரிய போஸ்டர்கள், பெரிய அளவில் ‘தினகரன்’ நாளிதழில் விளம்பரங்கள் என ஒரு வெற்றிப்பட சினிமாவுக்கு நிகரான ஆரவாரத்துடன் தொடர்கதையாக இது ‘குங்குமம்’ வார இதழில் வெளியானபோது பத்திரிகையுலகிலும், வாசகர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம், இது த்ரீ இன் ஒன் தொடர். ஒரு கதை இக்காலத்தில் நிகழ்வது. இன்னொன்று, பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் இளமைக்காலத்தை அடிப்படையாகக் கொண்ட சரித்திரம். மூன்றாவதோ, முற்றிலும் மாறுபட்ட மாயாஜாலக் கதை.
இறுதி வரை எங்குமே இணையாத இந்த மூன்று கதைகளும் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வெளியானது. இது தவிர அவ்வப்போது மகாபாரத காலகட்டத்து நிகழ்வும் வந்து போகும். தமிழக தொடர்கதை வரலாற்றில் இதற்கு முன் இதுபோல் எந்த எழுத்தாளரும் மூன்று தனித்தனி ஜானர்களை ஒரே தொடராக எழுதியதில்லை. எப்படி வெகுஜன வார இதழ்களில் தொடர்கதைகளே இல்லாமல் போனபோது, அதற்கு ‘கர்ணனின் கவசம்’ தொடர் வழியாக ‘குங்குமம்’ மீண்டும் உயிர்கொடுத்ததோ, அப்படி ‘சகுனியின் தாயம்’ வழியாக இந்த வித்தியாசமான புதிய முயற்சிக்கும் ‘குங்குமம்’ பத்திரிகையே வித்திட்டிருக்கிறது. வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற இந்த தொடர், நூலாகவும் பெரும் வெற்றி பெற்றது. கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு கீழே வைக்கத் தூண்டும் அனுபவத்தைத் தரும்.
Book Details | |
Book Title | சகுனியின் தாயம் (த்ரில்லர் நாவல்) (Saguniyin thayam) |
Author | கே.என்.சிவராமன் (Ke.En.Sivaraaman) |
Publisher | சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam) |
Pages | 362 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |