Menu
Your Cart

கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள்

கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள்
-5 %
கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள்
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு நிகழ்வு நடந்தபோது (1920) சாகித்ய அக்காதெமி நடத்திய ஒருநாள் உரையரங்கில் படித்த 14 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வாணிதாசன் (1915-1974) புதுச்சேரி வில்லியனூரில் பிறந்தவர். இயற்பெயர் ரங்கசாமி. வைணவ மரபினர். முறையாகத் தமிழ்ப் படித்துவிட்டு ஆசிரியப் பணிக்கு வந்தவர். பெரியாரின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். தமிழ்த் தேசியமும் உண்டு. ஆரம்பத்தில் ரமி என்ற பெயரில் எழுதினார். பின் வாணிதாசன் ஆனார். வாணிதாசனைப்பற்றிய இந்த நூலில் பாடுபொருள் தலைப்பில் மூன்று கட்டுரைகளும் வடிவம் பற்றிய ஒன்றும் இவரது கவிதைகளின் புலப்பாட்டு நெறிகள் பற்றி நான்கு கட்டுரைகளும் வகைமைகள் பற்றி நான்கு கட்டுரைகளும் பிற தலைப்பில் இரண்டு கட்டுரைகளும் உள்ளன. மரபுவழிக் கவிஞரான வாணிதாசனின் கவிதைகளைப் போலவே கட்டுரைகளும் மரபுசார்ந்து பார்க்கப்பட்டவை. வாணிதாசன் உவமைகளை எளிதாகக் கையாண்டவர். இவரது கவிதைகள் பெரும்பாலும் தமிழ் மீட்டெடுப்புச் சார்புடன் உள்ளன என்கிறார் ஒரு கட்டுரை ஆசிரியர். வாணிதாசன் விக்டர்றியூகோவின் நாடகத்தையும் பிரஞ்சு சிறுகதைகள் சிலவற்றையும் மொழிபெயர்த்திருக்கிறார். இதுபற்றி விரிவான கட்டுரைத் தொகுப்பில் இல்லை. நூற்றாண்டு விழா கண்ட கவிஞனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள், அவர் படைப்புகளின் பட்டியல், வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் போன்றவற்றையும் இத்தொகுப்பில் சேர்த்திருக்கலாம். சாகித்திய அக்காதெமி பதிப்பில் இது போன்ற குறைபாடுகள் தொடர்ந்துவருவதை ஏற்கனவே சிலர் சுட்டிக்காட்டினாலும் வைராக்கியமாக இவற்றைத் தவிர்ப்பதில் அக்காதெமி கவனம் செலுத்துகிறது.
Book Details
Book Title கவிஞர் வாணிதாசன் நூற்றாண்டு விழா உரையரங்கக் கட்டுரைகள் (Kavignyar Vanidasan Nootraandu Vizha Uraiyaranga Katturaigal)
ISBN 9788126048212
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 272

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author