- Edition: 1
- Year: 2012
- Page: 150
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கயல் கவின் வெளியீடு
சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
ஈழத்து இளம் படைப்பாளிகளுள் முக்கியமானவர் இளங்கோ, ஈழப் போராட்ட காலங்களில், சென்ற திசையெங்கும் யுத்தம் தொடர்ந்து விரட்ட, உள்நாட்டிலேயே ஊர் ஊராக இடம்பெயர்ந்து அகதியாக அலைந்தவர். தன் பதினாறாவது வயதில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். இக் காலகட்ட அனுபவங்கள்தான் இவரது படைப்புகளின் களம். போர் அவலங்களினதும் புலம்பெயர் வாழ்வின் அலைக்கழிதல்களினதும் மெளன சாட்சியமாய் விளங்கும் இக்கதைகளில் சாவு இடைவிடாது தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. வாழ்வுக்கும் சாவுக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகின்றது. ஆனாலும், வாழ்வின் மீதான நம்பிக்கையை இழக்காமல் மரணத்திற்குள் வாழ்தலையும் பேசுகின்றன. காதலும் மகிழ்ச்சியும் துயரமும் ஒன்றொயொன்று பின்னிப் பிணைந்து நகர்கின்றன.
தாய் நாட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய வாழ்வுக்குள் திணிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட புலம்பெயர் வாழ்வில், புகலிடக் கலாசார அழுத்தத்தின் ஆழத்தில், சொந்த பண்பாடு உரையாடலாய்க் குவிந்து கிடக்கிறது என்பதற்கு இக்கதைகளும் சாட்சி.
Book Details | |
Book Title | சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (Sambal Vanathil Maraium Vairavar) |
Author | இளங்கோ (Ilango) |
Publisher | கயல்கவின் (kayalkavin) |
Pages | 150 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |