-5 %
Out Of Stock
சாண்ட்விச் - புணர்தலின் ஊடல் இனிது
தரணி ராசேந்திரன் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195580101
- Page: 153
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Vara Tea Pathippagam
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நம் சமூகத்திற்கு பாலியல் கல்வி தேவையா? பாலியல் கல்வி கொடுப்பதன் மூலம் பாலின சமத்துவம் மேம்படுமா? பாலியல் குற்றங்கள் குறையுமா? இல்லை பாலியல் கல்வி அவசியமற்றது, பாலியல் எப்போதும் போல் நம் சமூகத்தில் மறைபொருளாகவே இருக்க வேண்டும்.
இது போன்ற சிந்தனைகள் ஒரு புறமிருக்க இந்த நாவலை என் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து எழுதியிருக்கிறேன். இந்த நூல் என்(ஆண்) பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும்.
பாலியல் தொடர்பாக ஒரு ஆண் நம் சமூகத்தில், சமூகத்தால் எவ்வாறு வளர்கிறான், வளர்க்கப்படுகிறான் , எதிர் பாலினம் பற்றிய அவனின் புரிதல்களை எவ்வாறு அவன் அறிந்திருக்கக்கூடும் சமூகம் அதற்கான சாதனமாக எதை கொடுத்திருக்கிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றுமேயில்லை. என் முப்பது வருடத்தில் பாலியல் பற்றி பாலினம் பற்றி இதுவரை நண்பர்களுடன் கூடிய ஆபாசப் பேச்சுகளை தவிர வெளியில் அறிவார்ந்து ஒருமுறைக்கூட பேசியதோ கேட்டதோயில்லை.
இந்நிலையில் ஒட்டு மொத்த சமூக உளவியலுக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பாலியல் குறித்தான வெளிப்படை அறிவார்ந்த பேச்சுகளும் புரிதல்களும் தேவை என நினைக்கிறேன். இந்த நாவல் பதின் பருவம் தொட்டு ஒரு ஆண் முதல் குழந்தை பெறும் வரை அவனின் காமம் மற்றும் எதிர் பாலினம் குறித்த அவனின் பிம்பங்களை மாயைகளை எதார்த்தங்களை புரிதல்களை பேசும்.
அவனின் பதின் உலகம் ஆபாச வார்த்தைகளால் நிறைந்து கிடக்கிறது. அவனின் கல்லூரி காலம் உடல் மீதான இச்சைகளால் மூழ்கி கிடக்கிறது. அவனின் இளமை காலம் காமத்திற்கும் காதலிற்கும் இடையே விரிக்கப்பட்டிருக்கும் மாய ரேகையில் பயணிக்கிறது.
நூலை வாசிக்கும் வாசகருக்கு ஆணின் பள்ளி கல்லூரி வாழ்க்கையில் ஆபாச காம நிகழ்வுகளை தாண்டி வேறேதும் இல்லையா என கேட்க கூடும். நிச்சயம் சரி தான். ஆனால் நாவலின் கதையும் கருவும் கதாப்பாத்திரத்தின் காம உளவியல் பற்றி பேசுபவை.
“சாண்ட்விச்” தற்போதைய சூழலில் மிக முக்கியமான நூல் என கருதுகிறேன். நூலை வாசிப்போருக்கு புதிய சிந்தனைகளை கொடுக்குமென நம்புகிறேன்.
Book Details | |
Book Title | சாண்ட்விச் - புணர்தலின் ஊடல் இனிது (sandwich-punarthalin-oodal-inithu) |
Author | தரணி ராசேந்திரன் |
ISBN | 9788195580101 |
Publisher | வர டீ பதிப்பகம் (Vara Tea Pathippagam) |
Pages | 153 |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Love | காதல், Sex | பாலியல் - காமம், 2022 Release |