Menu
Your Cart

சங்கப் பெண் கவிதைகள்

சங்கப் பெண் கவிதைகள்
-5 %
சங்கப் பெண் கவிதைகள்
சக்தி ஜோதி (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘சங்கப் பெண் கவிதைகள்’ - கட்டுரை நூல்தான். நாற்பத்தைந்து கட்டுரைகளையும் ஒரே மாதிரியாக இல்லாமல், ஒவ்வொரு மாதிரியாக எழுதியிருக்கிறார். ‘அவளின் சஞ்சலமான மனதின் ஓசைதான் இரவின் பேரோசையாக எழும்புகிறது. தலைவனுக்காகக் காத்திருந்த பெண்ணே இரவின் ஓசையாக மாறுகிறாள்.’ ‘அவனுடைய பாதையை இவள் கற்பனையில் வரைந்துகொண்டிருக்கிறாள்.’ ‘ஒருவரின் நினைவு என்பது அவர் சொன்ன சொற்களாகவே இருக்கின்றன.’ பத்திக்குப் பத்தி இதுபோன்ற வாக்கியங்கள் வருவதால் கட்டுரைகளைப் படிக்கிற உணர்வு எழாமல், சிறுகதைகளைப் படிக்கிற உணர்வே மேலெழுகிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சங்கப் பெண் கவிகள் பற்றி கொடுக்கப்பட்டிருக்கிற தகவல்களுக்காகவே இந்நூல் கவனம்கொள்ளப்பட வேண்டும். கட்டுரைகளின் மூலமாக சங்கப் பெண் கவிதை களுக்கு நூலாசிரியர் விளக்கம் தரவில்லை. உரை எழுதவில்லை. சங்கப் பெண் கவிதையை மட்டுமல்ல, மற்ற கவிதைகளையும், பிற இலக்கியங்களையும் எப்படிப் படிக்க வேண்டும் என கற்றுத்தந்திருக்கிறார். கவிதையை, இலக்கியத்தை அணுகுவதற்கான கருவிகளைத் தந்திருக்கிறார். வலிமை உள்ளது எஞ்சும். சங்கப் பெண் கவிதைகள் - நூலுக்கு வலிமை இருக்கிறது. - இமையம்
Book Details
Book Title சங்கப் பெண் கவிதைகள் (Sanga Pen Kavithaigal)
Author சக்தி ஜோதி (Sakthi Jothi)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 423
Year 2018
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை  ஒருபோதும் விரும்புவதில்லை.அவள் தேடி கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்திய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம்.வேறொரு தோற்றத்தில்..
₹86 ₹90
அரிதான அதனுடைய இருப்பையும் அசாதாரணமான ஒளியையும் அதீதமான கடினத்தையும் காணப் பொறாமல் மீளவும் வந்து முட்டி மோதிச் சிதறடிக்க முயலுபவர்கள் அறிவதில்லை உள்ளுக்குள் உடைந்து தேறிய பெண்ணொருத்தியின் உள்ளம் தீட்டவும் தீராத திண்மை கொண்ட வைரம் என்பதை...
₹95 ₹100
புகைப்படக்கருவியின் கோணத்திற்குள் அடங்கிவிடுகின்றன கட்புலனாகிற காட்சிகள் சட்டகத்திற்கும் அப்பால் எட்டியவரையிலும் எங்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை..
₹95 ₹100