Menu
Your Cart

தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை

தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை
-5 %
தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை
S.மாணிக்கவாசகம் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டிருக்கும் பேரனின் முதுகைத் தட்டியபடியோ அல்லது தோள்மீது சாய்ந்திருக்கும் பேத்தியின் காலைத் தட்டியபடியோ ஒன்றையடுத்து ஒன்றென கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் அவர்கள் கண்ட ஒவ்வொரு அனுபவத்துக்கும் காலும் கையும் இறக்கையையும் ஒட்டி கதைகளாக மாற்றிவிடுவார்கள். விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடமும் அத்தகு கதைகள் இருக்கும். கதைகள் இல்லாத மனிதனே இல்லை. இன்று தொழில்கள் பல்கிப் பெருகியிருக்கின்றன. கல்வி பல கதவுகளைத் திறந்துவைத்திருக்கிறது. வண்டலைக் கொண்டுவந்து சேர்க்கும் ஆற்றுவெள்ளத்தைப்போல புதிய கல்வியும் புதிய வேலையும் வாழ்க்கையில் புதிய அனுபவங்களைக் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. தொழில்சார் அனுபவப்பதிவுகள் இலக்கியத்தில் ஒரு முக்கியமான வகைமையாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. மயக்க இயல் மருத்துவராக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த எஸ்.மாணிக்கவாசகன் என்னும் மருத்துவர் தன் பணிக்கால அனுபவங்களை தூங்காமல் தூங்கி என்னும் தலைப்பில் 2008இல் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டார். ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மயக்கவியல் மருத்துவர்தான் முதலில் சந்திக்கிறார். நோயாளியின் வயது, ஆரோக்கியம், நோயின் தன்மை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோயாளிக்குக் கொடுக்கவேண்டிய மயக்க மருந்தின் அளவை அவர் தீர்மானிக்கிறார். மருந்து வேலை செய்யத் தொடங்கியதும் நோயாளி மெல்லமெல்ல மயங்கி ஒருவித தூக்கநிலைக்குச் சென்றுவிடுகிறார். தசைகள் தளரத் தொடங்குகின்றன. அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் சுய உணர்வுக்கு மீட்டு வரும் மருந்தை அளித்து கொஞ்சம் கொஞ்சமாக விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறார் மருத்துவர்.
Book Details
Book Title தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை (Thoongaamal Thoongi)
Author S.மாணிக்கவாசகம் (S.Maanikkavaasakam)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 128
Year 2009
Edition 02
Category Essay | கட்டுரை, Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author