- Edition: 01
- Year: 2018
- ISBN: 9789386555557
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுபிட்ச முருகன் (எதுவாக? எதுவாகவோ, அதுவாக? )- சரவணன் சந்திரன் :
இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ஏதோ ஒருவகையில் அன்றாடத்தின் மீதான சலிப்பிலிருந்தே புனைவு என்னும் செயல்பாடு தொடங்கியிருக்கிறது, அன்றாடத்தைச் சொல்லும்போதுகூட அன்றாடமல்லாததாக அதை ஆக்குதே புனைவின் கலை, இது வாழ்க்கையின் முடிச்சுகளைப் பேசும் படைப்பு. மட்டுமல்ல, அப்பால் சென்று ஒட்டுமொத்த வினாவில் தலையை ஓங்கி அறைந்துகொள்வதும்கூட எப்போதும் நான் புனைவில் எதிர்பார்க்கும் கூறு இது,
"எப்பிடிப் பொத்தி வச்சாலும் அவ வந்து கொத்திருவா" என்ற வரியிலிருந்து இந்தாவலை நான் மறுதொகுப்பு செய்யத் தொடங்கினேன், ஒரு தொடுகை கருவிலிருக்கும் குழந்தையை வந்து தொடும் புறவுலகு போல. அது ஓர் அழைப்பு, ஏவாளை லூசிஃபர் என, தாந்தேயை ஃபியாட்ரிஸ் என இருண்டபாதைகளினூடாக அழைத்துச் செல்கிறது விழுந்து எழுந்து புண்பட்டு சீழ் கொண்டு கண்ணீரும் கதறலுமாக ஒரு நீண்ட பயணம். 'வட்டத்தின் ஓரமாகத் தவழ்வதைத் தவிர வேறு எதுவும் அப்போது எனக்கு விதிக்கப்படவில்லை" என்னும் பெருந்தவிப்பு.
Book Details | |
Book Title | சுபிட்ச முருகன் - எதுவாக? எதுவாகவோ, அதுவாக? (subitcha-murugan) |
Author | சரவணன் சந்திரன் (Saravanan Chandran) |
ISBN | 9789386555557 |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 0 |
Published On | Oct 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |