Menu
Your Cart

கேங்டாக்கில் வந்த கஷ்டம்

கேங்டாக்கில் வந்த கஷ்டம்
-5 % Out Of Stock
கேங்டாக்கில் வந்த கஷ்டம்
சத்யஜித் ரே (ஆசிரியர்)
₹57
₹60
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர். முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன. ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘கேங்டாக்கில் வந்த கஷ்டம்’ ஐந்தாவது புத்தகம். கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக, இமயமலையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கேங்டாக் செல்கிறார்கள் தபேஷும் ஃபெலுடாவும். விமானத்தில் அறிமுகமாகிறார் திரு. போஸ். மூவரும் கேங்டாக்கில் கால்வைக்கும் போது, போஸின் நண்பர் ஷெல்வான்கர் ஒரு விபத்தில் மரணமடைந்த செய்தி இவர்களுக்காகக் காத்திருக்கிறது. அது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு?
Book Details
Book Title கேங்டாக்கில் வந்த கஷ்டம் (Gangtokil Vandha Kashtam)
Author சத்யஜித் ரே (Satyajit Ray)
ISBN 9788183688192
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 128
Published On Nov 2007
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80
மகாராஜாவின் மோதிரம்புராதன காலத்து மோதிரம் ஒன்றின் மீது ஆசை கொண்டவர்கள் பலர். பந்தாகக் கைமாறிக் கொண்டிருந்த அந்த ‘மகாராஜாவின் மோதிரம்’ இப்போது எங்கே? அதை எடுத்தது யார்? துரத்தி வருபவர்களோ அதற்காக எதையும் செய்ய தயார். ஃபெலுடா தானே ஏற்றுக் கொண்ட வழக்கில், பகை உணர்வு எப்படி ஒரு மனிதனை கொலையாளி ஆக்குகிறத..
₹76 ₹80
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் ..
₹29 ₹30
காட்டுப்பகுதியில் ஓய்வெடுக்கச் சென்ற ஃபெலுடாவின் முன்னே ஒரு புதிர்.அதை விளக்கினால் வெளிவர இருந்ததோ ஒரு புராதன புதையல்.இடையே வெளிவந்தது ஓர் ஆட்கொல்லி வங்கப்புலி. ரகசியங்களை உணர்ந்து, அதன் பின்னே நிகழ்ந்த ஒரு மரணத்தையும் புலப்படுத்திய ஃபெலுடா, புதையலை எடுத்தாரா? புலியை வீழ்த்தினாரா?என்பதைக் கூறுவதுதான..
₹76 ₹80