Menu
Your Cart

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் | SCs and STs Act

பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் | SCs and STs Act
-5 %
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் | SCs and STs Act
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள். சுதந்திர இந்தியா, குடியரசு நாடாக ஆன பின்னர், அந்தப் பட்டியலில் மேலும் பல சாதிகள் சேர்க்கப்பட்டு, 1950ஆம் வருடம் “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். பட்டியல்படுத்தப்பட்டது, அவர்களை மேம்படுத்துவதற்காகத்தான்; சிறுமைப்படுத்த அல்ல. ஆனால், அவர்கள் மேலும் இழிவாக நடத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க “குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 இயற்றப்பட்டு, அதைச் செம்மையாக செயல்படுத்த, 1977ஆம் வருடம் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இதனால் வரவேற்கத்தக்க தாக்கம் ஏற்படாததாலும், தீண்டத்தகாதவர்கள் என சிலரால் கூறப்படும் நபர்கள் மீதான கொடூரக் குற்றங்கள் அதிகரித்ததாலும், அக்குற்றங்கள் வன்கொடுமைகள் என அழைக்கப்பட்டு, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 இயற்றப்பட்டும், அதை திறம்பட அமல்படுத்துவதற்காக, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 உருவாக்கப்பட்டு, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கமே உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வகை செய்யப்பட்டது. விதிகள் 2009, 2011 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பல திருத்தங்களுக்கு உள்ளாகியும் தற்போது 16.04.2016 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, இழப்பீட்டு தொகை 8 லட்சத்து 25 ஆயிரம்வரை உயர்த்தப்பட்டுள்ளது. வன்கொடுமைகளின் வகைப்பாடுகளை அதிகப்படுத்தி, சட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றங்களின் கடப்பாடுகளை அதிகரித்து, 2014இல் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியானதால், திருத்தச்சட்டம் 1/2016இன்கீழ் உருவாக்கப்பட்டு, அது 26.01.2016இல் அமலுக்கு வந்துள்ளது.
Book Details
Book Title பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் | SCs and STs Act (SCs and STs (Prevention of Atrocities) Act)
Author வீ.சித்தண்ணன் Bsc, M.L., CC & IS (Vee.Siththannan Bsc, M.L., Cc & Is)
Publisher ஜெய்வின் பதிப்பகம் (Jeywin Publications)
Year 2018
Edition 1
Format Paper Back
Category Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

காவல் புலன்விசாரணை (அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்) - வீ. சித்தண்ணன் : - இரண்டு பாகங்கள்           இந்நூலில்     2005, 2008, 2010 & 2013 -ம் ஆண்டுகளின் குற்றவியல் சட்டத் திருத்தங்கள் உள்ளடக்கியது. 14/11/2012 அன்று அமலுக்கு வந்த "பாலியல..
₹1,425 ₹1,500
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்பட..
₹380 ₹400
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்பட..
₹570 ₹600
தமிழ்நாட்டின் நீதிபரிபாலனத்துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் அல்லாது, உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்..
₹214 ₹225