-5 %
செங்கோட்டை முழக்கங்கள்
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)
₹333
₹350
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேசப்பற்றை எழுத்தின் மூலமாகவும் பேச்சின் மூலமாகவும் இசை முதலான கலைகளின் வழியாகவும் நாட்டு மக்களிடம் சேர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.அவருடைய இந்த எண்ணத்தின் வெளிப்பாடே `நாட்டுக்கொரு பாட்டு'. இதில் 44 நாடுகளின் தேசியகீதங்களை தமிழில் மொழிபெயர்த்திருந்தார். `செங்கோட்டை முழக்கங்கள்' என்னும் இந்தத் தொகுப்பிலும் தேசப்பற்று மிளிர்கிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 75 ஆண்டுகாலத்தில் சுதந்திர இந்தியா கடந்து வந்திருக்கும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் இந்தியாவின் பிரதமர்கள் எப்படி எதிர்கொண்டார்கள், தடைக் கற்களை படிக்கற்களாக்கி இந்தியாவை முன்னேற்றுவதற்கு எப்படி பாதை அமைத்தார்கள் என்பதையெல்லாம் அந்தந்த காலகட்டத்தில் பதவி வகித்த பிரதமர்கள் தங்களின் சுதந்திர நாள் உரைகளின் வழியாக மக்களிடம் சேர்த்தார்கள் என்பதை மனதுக்கு மிகவும் நெருக்கமாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம். செங்கோட்டையில் சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் பி.வி.நரசிம்மராவ் வரை, வெவ்வேறு காலகட்டத்தில் முதல் 50 ஆண்டுகளில் பிரதமர்கள் ஆற்றிய உரைகளை சீரிய முறையில் தொகுத்திருக்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. பிரதமர்களின் உரை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருக்கும். காற்றில் கரைந்திருக்கும் அந்த எழுச்சி உரைகளை, நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்து எழுத்தில் வடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்
Book Details | |
Book Title | செங்கோட்டை முழக்கங்கள் (sengottai muzhakkangal) |
Author | பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (Baskaran Krishnamurthy) |
Publisher | இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai) |
Published On | Jan 2024 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2024 New Releases |