- Edition: 04
- Year: 2016
- Page: 95
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
தமிழர் மருத்துவம் - மரு.மைக்கல் செயராசு:
சித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் மருத்துவர் மைக்கேல். அத்துடன், தாவர-உயிரினப் பன்மை நிறைந்த பொதிகை மலையின் தனிச்சிறப்பைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். குறிப்பாக இயல் தாவரங்கள் எப்படி நம் மண்ணைக் காக்கின்றன, மருந்தாகப் பயன் தருகின்றன என்பதையும் தெளிவாக விவரித்துள்ளார்.
‘தமிழும் தமிழ் மருத்துவமும்’ எங்க தொன்றியதுன்னு கேட்டா நாம கண்ணை மூடிக்கிட்டுச் சொல்வோம் பொதிகைன்னு.ஏன் சொல்றோம்னு யாருக்கும் தெரியாது.அதுக்குக் காரணம் என்னவென்று கேட்டால்,நிறையத் தாவரங்கள் இருக்குறதால மனிதன் பேச ஆரம்பிக்கும் போது,மொழி உருவாகும்போது முதல்ல தாவரங்கள் வச்சுத்தான் மொழியை உருவாக்கியிருப்பான் .இது என்ன மரம் என யோசித்து அவன் பேர் வைக்க ஆரம்பிப்பான்.
அப்ப மொழி உருவாகிறதுக்குத் தாவரங்கள் நிறைய இருக்கணும்.தாவர வளம் அதிகமாக இருக்கிற இடத்துல தோன்றின மொழியில அதிகச் சொல் வளம் இருந்திருக்கும்.அப்படித்தான் இந்தப் பொதிகையை நாம பாக்கணும்.பலவிதமான காரணங்களால் பொதிகை மலையை பல்லுயிர்ப் பெருக்கத்தின் ‘உச்சாணிக்கொம்பு’ன்னு சொல்றோம்.
Book Details | |
Book Title | தமிழர் மருத்துவம் (Thamizhar maruthuvam) |
Author | மரு.மைக்கல் செயராசு (Maru.Maikkal Seyaraasu) |
Compiler | ஏ.சண்முகானந்தம் (E.Shanmuganantham), தயாளன் (Thayaalan) |
ISBN | 978-81-932691-3-8 |
Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
Pages | 95 |
Published On | Apr 2016 |
Year | 2016 |
Edition | 04 |
Format | Paper Back |
Category | சித்த மருத்துவம் | Siddha medicine |