Menu
Your Cart

முயல் தோப்பு

முயல் தோப்பு
-5 % Out Of Stock
முயல் தோப்பு
பாஸ்கர் சக்தி (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளில் தனது பார்வையை ஊடுருவிச் செலுத்த முடிகிறது அவரால். வாசகரின் கவனம் சிறிதும் பிசகாமல் தன்வயப்படுத்தி புனல் வைத்து எண்ணை ஊற்றுவது போல் நமக்குள் நிரப்பி விடுகிறார். ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப்போல, நடைபழகும் குழந்தை நிலம் நோகாமல் அடியெடுத்து வைப்பதுபோல யாருக்கும் தொந்தரவு தராத தனித்த எள்ளல் மொழிதான் அவரது புனைவின் முதலீடு. பலகதைகளில் எள்ளல் மொழியாகவும், இன்னும் சிலவற்றில் எள்ளலே கதையாகவும் ஆகியிருக்கிறது. சுவலியின் தீவிரத்தை ஆனவரைக்கும் இலகுவாக்குவதற்காக எள்ளலை ஊடகமாகக் கையாளுகிறார் சாப்ளினைப்போல. தன் கதைகளில் வரும் கனமான நிகழ்வைக்கூட அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து, நீருக்குள் பாறையைப் புரட்டுவது போன்ற இலகுவாக மாற்றுகிறார்.
Book Details
Book Title முயல் தோப்பு (Muyal Thoppu)
Author பாஸ்கர் சக்தி (Baskar Sakthi)
ISBN 9789384301064
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 128
Published On Jan 2016
Year 2016
Edition 1
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத..
₹428 ₹450
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆ..
₹152 ₹160
ஒரு அறிவார்ந்த, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாக எதை கருதலாம்? அங்கே ஒரு அச்சமின்மை நிலவ வேண்டும். யாரும் யாரைப் பார்த்தும் அஞ்சாத ஒரு நிலை இருந்தால் அங்கே சம்த்துவம் நிலவுகிறது என்று பொருள். யாராவது, யாருக்காவது எதன் பொருட்டோ பயந்து கொண்டிருந்தால் அந்த சமூகத்தை நோய் பீடித்திருக்கின்றது என்று அர்த்த..
₹152 ₹160