-10 %
கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்
ஒ.சுந்தரம் (ஆசிரியர்)
₹135
₹150
- Edition: 1
- Year: 2019
- Page: 336
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிவகாமி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உள்ளாட்சி அமைப்பின் தலைவர் முதல் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர் பொறுப்பு வரை வகித்தவர் மு.கண்ணப்பன். அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் இது.
மு.கண்ணப்பன் தனது 17 -ஆவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டது, விலைவாசி உயர்வை எதிர்த்து 1962 இல் நடந்த மறியல் போராட்டத்தில் தந்தை கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும்போது கலந்து கொண்டு சிறை சென்றது, 23 ஆவது வயதில் ஆலாம்பாளையம், அனுப்பர்பாளையம் கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சிமன்றத் தலைவரானது, 1965 இல் இந்திய- பாகிஸ்தான் போரின்போது இந்திய அரசின் தங்கத்தின் கையிருப்புக் குறைந்துபோனதைத் தொடர்ந்து, அரசு தங்கச் சேமிப்பு பத்திரங்களை வெளியிட்டது; அதற்காக பொள்ளாச்சி ஒன்றிய பெருந்தலைவர் என்கிற முறையில் மு.கண்ணப்பன் தங்கச் சேமிப்புத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முனைந்து 9 ஆயிரம் கிராமுக்கும் மேல் தங்கம் சேமித்தது, 1975 இல் இந்திராகாந்தி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது அதை எதிர்த்து தமிழக அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போது அமைச்சராக இருந்த கண்ணப்பன் கருத்துத் தெரிவித்தது, அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தது என பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
1976 இல் கண்ணப்பன் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 1972 இல் இராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெருவுடையார் கோயிலில் சிலை வைக்க தமிழக அரசு முடிவெடுத்தபோது, கோயில் வளாகத்துக்குள் சிலை வைக்க மத்திய அரசு அனுமதி மறுத்தது, அதையும் மீறி சிலை வைத்தது போன்ற குறிப்பிடத்தக்க தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
தனிமனிதர் ஒருவரின் வரலாறாக மட்டுமல்லாமல், அவர் வாழ்ந்த காலத்தின் வரலாறாகவும் இந்நூல் இருப்பது சிறப்பு.
Book Details | |
Book Title | கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும் (Kovai Mu. Kannappan vaazhvum paniyum) |
Author | ஒ.சுந்தரம் |
Publisher | சிவகாமி பதிப்பகம் (Sivagami pathippagam) |
Pages | 336 |
Published On | Sep 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |