-5 %
சிவப்புக் கந்தகம் - ஸூஃபி நெறி விளக்க நூல்
₹143
₹150
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788196504540
- Page: 114
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சீர்மை நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனிதனை முழு மனிதனாக மாற்றும் ஆன்மிக ரசவாதமான ஸூஃபித்துவத்தைப் பயில்வதற்கான சிறந்த பாடநூல்களுள் ஒன்று இது. ஆன்மிகப் பாதையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் சாதகருக்குப் பயனளிக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. ஆன்மிகச் சாதகர்கள் அனைவருக்குமான அகநோக்கு சார்ந்த குறிப்புரைகள் நிறைந்திருப்பதால் சுருக்கமாக இருந்தாலும் பெரிதும் பயனளிப்பதாக உள்ளது. துருவேறி நையும் தனது இரும்பு மனத்தை மாசறு பொன்னாக மாற்ற விழைவோருக்கு, தனது புழுதியை அமிர்தமாக மாற்ற முனைவோருக்கு இந்நூல் ஒரு வழித்துணையாக வரும்.
***
‘சிவப்புக் கந்தகம்’ என்னும் சொல் உயர்வான சுயாதீன ஆன்மிக விழிப்படைதலை அல்லது அகதரிசனத்தைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ‘சிவப்புக் கந்தகம்’ என்பது பல்லோரும் தேடுகின்ற அரிதான ஒரு ரசவாதப் பொருளாகும். அது கீழ் மாழையான இரும்பினைச் சொக்கத் தங்கமாக மாற்றுவதாகும். ஒருவர் தனது ஆன்மிக வழிகாட்டியைக் கண்டடைவதையே ‘சிவப்புக் கந்தகத்தைக் கண்டடைதல்’ என்று சொல்கிறார்கள். ‘மறைந்த பொக்கிஷத்தை’ ஒருவர் தன் சுயத்தினுள் கண்டடைவதே ‘சிவப்புக் கந்தகம்’ ஆகும். அதனைக் கண்டடைவது அரிதினும் அரிது என்றாலும் அல்லாஹ்வின் மாபெரும் நேசர்கள் அதனை அபரிமிதமாகக் கண்டடைந்துள்ளனர். கந்தகம் என்பதன் உலகளாவிய அர்த்தம் இறையாணை என்பதாகும்.
-- முர்ஷிது எஃப்.ஏ.அலீ சனூசீ
Book Details | |
Book Title | சிவப்புக் கந்தகம் - ஸூஃபி நெறி விளக்க நூல் (Sivappu kanthagam) |
Author | அப்துல்லாஹ் இப்னு அபீபக்ரு அல் ஐதறூஸ் |
Translator | ரமீஸ் பிலாலி |
ISBN | 9788196504540 |
Publisher | சீர்மை நூல்வெளி (Seermai Noolveli) |
Pages | 114 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை, 2024 New Releases |