Menu
Your Cart

சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை

சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை
-5 %
சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை
ஆரூர் பாஸ்கர் (ஆசிரியர்)
₹209
₹220
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'அட, சோஷியல் மீடியாதானே, நமக்குத் தெரியாத ஃபேஸ்புக், ட்விட்டரையா இந்தப் புத்தகம் சொல்லிக் கொடுத்துடப்போகுது!' என்ற எண்ணத்துடன் இந்தப் புத்தகத்துக்குள் நுழைகிறீர்களா? நல்வரவு. உங்களுக்குச் சில இனிய (அல்லது திடுக்கிடும்) ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒரு விஷயம் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, நாம் அதை ஆண்டுகொண்டிருக்கிறோம் என்கிற (பொய்யான) மன நிறைவுதான் அந்த விஷயம் நம்மீது செலுத்தும் ஆதிக்கத்துக்கான முதல் படி. அந்த பாவனையில் நாம் மயங்கியிருக்கிற நேரத்தில் அந்த விஷயம் நம்மைச் சுழற்றி உள்ளிழுத்துவிடுகிறது. சோஷியல் மீடியாவைப் பொறுத்தவரை அநேகமாக நாம் எல்லாரும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். இலவச வசதி என்று நம் கணினிகளில், செல்பேசிகளில் நுழைந்த இந்த விஷயம் கொஞ்சங்கொஞ்சமாக நம்மைத் தன்னுடையதாக்கிக்கொண்டுவிட்டது, இதில் அறிவாளிகள், அனுபவசாலிகள் என்று யாரும் மிச்சமில்லை. என்ன செய்யலாம்? இந்த வலையிலிருந்து எப்படி மீளலாம்? அதைத்தான் இந்தப் புத்தகம் கற்றுத்தருகிறது. சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றிபெறுவதற்கான எளிய உத்திகளைப் படிப்படியாக விளக்கி நம்முடைய பிரச்சனையைத் தீர்க்கும் சிறந்த ப்ளூ ப்ரின்ட் இது. கவிதைகள், புனைகதைகளில் அழுத்தமாகக் கால் பதித்த நூலாசிரியர் ஆரூர் பாஸ்கரின் முதல் புனைவல்லாத நூல் இது, அவருடைய பல்லாண்டு சமூக ஊடக அனுபவத்தின் சாரத்தை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி உதவுகிறது.
Book Details
Book Title சோஷியல் மீடியா: இது நம்ம பேட்டை (social-media-ithu-namma-pettai)
Author ஆரூர் பாஸ்கர் (Aaroor Paaskar)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாஃப்ட்வேர் வேலை, வெளிநாட்டில் வாழ்க்கை, கைநிறைய சம்பளம், திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்... இப்படி ஆசைப்பட்டுதான் நானும் மலேசியாவுக்கு வந்தேன். அந்தக் கனவு நிஜமாகிவிட்டதாகவே நினைத்தேன். ஆனால், என்னையும் அறியாமல் என்னைச்சுற்றி ஒரு வலை பின்னப்பட்டது. அதை இழுத்து மேலே போட்டுக்கொண்டவனே நான்தான் என்பது அ..
₹261 ₹275
வாழ்க்கையில் வாழ்வதும், தாழ்வதும் இரு வேறு துருவ நிலைகள். ஒன்றுக்கொன்று எதிரான இந்நிலைகளை ஒரு வாழ்க்கையில் தன்னிச்சையாகச் சந்திக்க நேர்வது துயரம். அது, செழித்து வளர்ந்த நிலம் வறண்டு வெடிப்புற்றுப் பாளம்பாளமாகப் பிளந்து கிடப்பதைப் பார்ப்பதற்கு ஒப்பானது. ஒரு பெரும் கனவை நனவாக்கிவிடத் துடித்து, வாழ்க்க..
₹124 ₹130
உலக அரங்கில் அமெரிக்கா மிகப்பெரிய வலிமையானதொரு தேசம். பொருளாதார, ராணுவ ரீதியில் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு. இயற்கை வளங்களால் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு. தொழில்நுட்பத்தில் குளோபல் லீடர். உலகின் தவிர்க்கமுடியாததொரு சக்தி. என்றெல்லாம் பேசப்படுகிறது. அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை அமெரி..
₹219 ₹230
இன்றைக்குச் சமூக ஊடகம் இல்லாத கைகள் இல்லை, மனங்கள் இல்லை. காலை எழுந்து படுக்கையிலிருந்து கீழிறங்குவதற்கு முன்பு தொடங்கி மீண்டும் இரவு தூங்கச்செல்லும் கணத்துக்கு முன்புவரை சமூக ஊடகங்கள் நம்முடன் உறவாடுகின்றன. இந்தச் சமூக ஊடகங்களில் புழங்கும் முறை குறித்தும் அதன் வாயிலாக ஏற்படும் அக, புறச் சிக்கல்கள் ..
₹247 ₹260