Menu
Your Cart

சொல்லாததையும் செய்

சொல்லாததையும் செய்
-5 %
சொல்லாததையும் செய்
சோம வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘சொல்லாததையும் செய்’ அறிவுரைகள் அல்ல. தோளில் கைபோட்டு தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள். நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடியவைகளைச் சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம. வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. இந்த வாசகர்களின் எண்ணத்தை உறுதிசெய்யும் மற்றுமொரு புத்தகம், சொல்லாததையும் செய். சமீபத்திய நடைமுறை உதாரணங்கள், மறுக்க முடியாத, வலுவான வாதங்கள், சிந்திக்க வைக்கும் குட்டிக் கதைகள் என்று அவருக்கே உரிய சுவாரஸ்யத்துடன் வெற்றி பெறுவதற்கான அத்தனை வழிகளையும் புத்தகம் முழுக்க சொல்லிப்போகிறார் சோம. வள்ளியப்பன். முன்னேற வேண்டும், வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களும் சிந்தனைகளும் ஏராளமாய் பரவிக்கிடக்கும் பொக்கிஷங்களான, ‘காலம் உங்கள் காலடியில்’, ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’, ‘எமோஷனல் இண்டலிஜென்ஸ் – இட்லியாக இருங்கள்’, ‘உலகம் உன் வசம்’ போன்ற மோட்டிவேஷன் புத்தகங்களை அடுத்து, சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல், ‘சொல்லாததையும் செய்’.
Book Details
Book Title சொல்லாததையும் செய் (Sollathathaiyum Sei)
Author சோம வள்ளியப்பன் (Soma Valliyappan)
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 144
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உ..
₹285 ₹300
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம்..
₹261 ₹275
கிடைத்தவரை போதும், வாழ்ந்தவரை லாபம் எனும் மனநிலை துறவிகளுக்கு வேண்டுமானால் சரிப்படலாம். நம்மைப் போன்றவர் களுக்குக் கண் வானில்தான் பதிந்திருக்கவேண்டும். மலையடிவாரம் அல்ல, மலையின் உச்சியான சிகரம்தான் நாம் கால் பதிக்க வேண்டிய இடம். படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில் நாம் தொடவேண்டிய உச்சம் அதுதான்..
₹181 ₹190
வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது. வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? ..
₹238 ₹250