-5 %
சொல்வது நிஜம்
மணா (ஆசிரியர்)
₹158
₹166
- Year: 2017
- ISBN: 9789383067527
- Page: 216
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நண்பர் மணா பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரக்கூடியவர். நாட்டின் நடப்புகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். சம்பவங்களை நேரில் பார்த்து , தகவலை அறிவதோடு மட்டுமல்லாமல், களப்பணியிலும் ஈடுபட்டு , அங்கே புதைந்துகிடக்கும் உண்மைகளைத் துருவி ஆராய்ந்து எழுதி வருபவர்களில் முதன்மையானவர். 'சொல்வது நிஜம்' என்ற இந்தப் புத்தகம் மணா எழுதி இருக்கும் முத்திரை பதித்த 33 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்திருக்கும் தகவல்கள் அனைத்தும் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் படும் கொடுந்துயரங்கள் கண்முன் சாட்சியமாகியுள்ளன. 'தீச்சட்டி கோவிந்தன்' என்ற காவல்துறை அதிகாரி, விடுதலை போராட்ட வீராங்கனை சொர்ணம்மாளை நிர்வாணமாக்கிக் கொடுமை செய்த அநீதியைக் கூறிவிட்டு அதே விடுதலை வீராங்கனைக்கு தியாகிகளுக்கு உரிய சலுகை கிடைக்காத கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாட்டுப்புறச் சிறுவர்களின் வாழ்க்கை, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் வாழ்க்கை , இவை படிப்பவர்களின் மனசாட்சியைக் கிளறி, இத்தனையும் உண்மைதானா? சுதந்திர நாட்டில் இவை எல்லாம் இன்னமும் நடக்கின்றனவா? என்று நினைக்கத் தோன்றுகிறது. மணா அவர்களின் நீண்ட அனுபவமும், சமூக அக்கறையும் இக்கட்டுரைகளை எழுதத் தூண்டியுள்ளன. அவரின் நெஞ்சக்குமுறல் எழுத்தில் வெளிப்படுகிறது. படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதில் மணா வெற்றி அடைந்திருக்கிறார் - புத்தகத்துக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து
Book Details | |
Book Title | சொல்வது நிஜம் (Solvathu Nijam) |
Author | மணா (Manaa) |
ISBN | 9789383067527 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 216 |
Year | 2017 |