Menu
Your Cart

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல் | Out of the Maze

புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல் | Out of the Maze
-5 %
புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல் | Out of the Maze
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லோராலும் மிகவும் நேசிக்கப்பட்ட ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூல் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக இப்போது இந்நூல் வெளிவந்துள்ளது.‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலின் கதை எங்கே முடிந்ததோ, அந்த இடத்திலிருந்து தொடங்குகின்ற ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல், உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுவது என்பது பற்றிய ஆழமான உண்மைகளை வழங்குகின்ற ஓர் எளிய கதையாகும்.சுண்டெலி அளவில் இருந்த ஹெம், ஹா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ‘என் சீஸை நகர்த்தியது யார்?’ நூலில் நாம் முதன்முதலாக சந்தித்தபோது, அவர்கள் பெரிதும் விரும்பி உட்கொண்ட சீஸ் திடீரென்று மாயமாய் மறைந்ததன் காரணமாக எதிர்பாராத மாற்றத்தை அவ்விருவரும் எதிர்கொண்டதை நாம் பார்த்தோம். புதிய சீஸைத் தேடிச் சென்றதன் மூலம், அந்த மாற்றத்தை எப்படி வெற்றிகரமாகக் கையாளுவது என்பதை ஹா கற்றுக் கொண்டான். ஆனால், ஹெம் தான் இருந்த இடத்திலேயே தொடர்ந்து சிக்கிக் கிடந்தான்.ஹெம் அடுத்து என்ன செய்தான் என்பதையும், அவன் கண்டுபிடித்த விஷயங்கள் எப்படி உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய புதிர்ப்பாதைகளில் எதிர்ப்படும் புதிர்களுக்குத் தீர்வு காணுவதற்கு உங்களுக்கு உதவும் என்பதையும் இப்போது ‘புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்’ என்ற இந்நூல் வெளிப்படுத்துகிறது‘சீஸ்’ என்பது உங்களுக்கு ஊட்டமளிக்கக்கூடிய ஏதோ ஒன்றுக்கான ஓர் உருவகம்தான். அந்த ஏதோ ஒன்று நல்லதொரு வேலையாக இருக்கலாம், அல்லது அன்பான ஓர் உறவு, பணம், உடமைகள், சிறந்த ஆரோக்கியம், அல்லது மன அமைதியாக இருக்கலாம்.‘புதிர்ப்பாதை’ என்பது நீங்கள் உங்கள் சீஸைக் கண்டுபிடித்து அதை மகிழ்ச்சியாக அனுபவிப்பதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற ஏதேனும் சவால் அல்லது கடினமான சூழ்நிலைக்கான ஓர் உருவகமாகும்.ஹெம்மும் அவனுடைய புதிய தோழியான ஹோப்பும் மேற்கொண்டுள்ள புதிய பயணத்தில் நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்தால், பாரம்பரியச் சிந்தனைக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பதன் மூலம் வாழ்க்கையிலிருந்து அதிகமானவற்றை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஆழமான உள்நோக்குகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களோடு தொடர்ந்து நீடிக்கும்.
Book Details
Book Title புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல் | Out of the Maze (Out of the Maze: An A-Mazing Way to Get Unstuck)
Author ஸ்பென்சர் ஜான்சன் (Spencer Johnson)
Translator நாகலட்சுமி சண்முகம் (Nagalakshmi Shanmugam)
ISBN 978-9388241823
Publisher Manjul Publishing House | மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் (Manjul Publishing House)
Pages 104
Year 2019
Edition 6
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் ம..
₹474 ₹499
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்..
₹189 ₹199
கௌரவன்நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும்நயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன்.பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்ட..
₹854 ₹899
சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்பட்டுள்ள வளர்ச்சியை, மாற்றங்களை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வருகின்றன. அந்த ஆராய்ச்சியின் வாயிலாக கிடைத்துள்ள அறிவியல் தகவல்கள், வரலாற்று..
₹759 ₹799