Menu
Your Cart

காக்கும் கார்த்திகைச் செல்வன்

காக்கும் கார்த்திகைச் செல்வன்
-5 %
காக்கும் கார்த்திகைச் செல்வன்
கே.சுந்தரராமன் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
முருகன் என்கிற பெயருக்கு அழகு என்று பொருள். இப்பெயரை ஒருமுறை உச்சரிக்கும்போது முப்பெரும்தேவர்களும் அருள் வழங்க வருகிறார்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுவர். ‘மு’ என்னும் எழுத்து முகுந்தனையும் (திருமால்), ‘ரு’ என்னும் எழுத்து ருத்ரனையும் (சிவபெருமான்), ‘க’ என்னும் எழுத்து கமலனான நான்முகனையும் (பிரம்மதேவன்) குறிப்பிடுகின்றன. ‘முருக’ என்கிற பெயரை உச்சரிக்கும்போதும் முருகப் பெருமானை அழைக்கும்போதும், மும்மூர்த்திகளின் அருளும் நமக்கு கிடைக்கிறது. ஆறு முகங்களைக் கொண்டதால் முருகப் பெருமானை ‘ஆறுமுகன் என்று அழைத்தாலும், அவர் ஆறு பகைவர்களை அழிக்கிறார் என்பதை அறிகிறோம். ஒருவர் மனதில் இருக்கும் ஆறு பகைவர்களான ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், ஆச்சர்யம் ஆகியவற்றை அழித்து, அவரை நல்வழியில் கொண்டு செல்ல முருக வழிபாடு துணை நிற்கிறது. இல்லம், கோயில், தமிழகம், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் முருகன் வழிபாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், சேவற்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் ஆகிய ஆறு ஆயுதங்களும், இடது புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கரம், தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகிய ஆறு ஆயுதங்களும் உள்ளன. முருகப் பெருமானின் சேவற்கொடிக்கு ‘குக்குடம்’ என்று ஓர் பெயர் உண்டு, இந்த சேவலே வைகறைப் பொழுதில் ஓங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துகிறது.
Book Details
Book Title காக்கும் கார்த்திகைச் செல்வன் (Kaakkum Karthigai selvan)
Author கே.சுந்தரராமன்
ISBN 9788197412127
Publisher இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai)
Pages 160
Year 2024
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Essay | கட்டுரை, 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மகான்களின் வழியைப் பின்பற்றி, தூய மனதுடன், நாம் இறைவனை சிக்கெனப் பிடித்து, அவனை நோக்கி பயணிக்க வேண்டும். மகான்களின் வழியில் நடந்து, அவர்களது பெருமைகளை உணர்ந்து கொண்டால், அவர்களின் நடத்தை போன்றே நமது நடத்தையும் அமைந்துவிடும். மனிதரின் வாழ்க்கைப் பயணத்துக்கு உரிய விதிகளாக மகான்களின் வாக்கும் வாழ்வும் ..
₹304 ₹320
ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் 51 பாகங்களாக விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தேவி பாகவதம் என்ற நூல், சக்திக்கு 108 பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்றும் கூறுகிறது. தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் ப..
₹171 ₹180
ஆதி சக்தியின் ரூபமான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தந்தை தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி, அவர் நடத்திய யாகம் அழியுமாறு சபித்தார். தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத அவர், பின்னர் அந்த யாகத் தீயிலேயே எரி..
₹171 ₹180