Menu
Your Cart

ரங்கரட்டினம்

ரங்கரட்டினம்
ரங்கரட்டினம்
₹275
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரங்கராட்டினம்! கலியுகத்தில் மக்களின் மதிமயங்குவதற்கு கலி புருஷன் தேர்ந்தெடுத்த ஐந்து சாதனங்கள் சூதாட்டம், மது, மாமிசம், பெண் மற்றும் தங்கம், குறிப்பாக, சூரியகிரகணம் ஒன்றின் போது, பூமி பிளந்து வெளிப்படும் ‘அபரஞ்சி சுவர்ணம்’ தென்னகத்தை படாதபாடு படுத்துகிறது. திருவரங்க இன்னமுதன் அரங்கநாதனை கூட இந்த கலியின் கோர விளையாட்டு விட்டு வைக்கவில்லை. நமது தர்மத்திற்கு பெரும் சோதனை விளைகிறது. அதை யார் பாதுகாத்து நம்மிடம் அதை எப்படி பத்திரமாக சேர்ப்பித்தார்கள் என்பதை விளக்குகிறது ‘ரங்கராட்டினம்’ கதை. இந்த நாவல் நிச்சயம் பலரது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று என் உள்மனது சொல்கிறது. எத்தகைய தர்மத்தில் பிறந்துவிட்டு, அறியாமையினால் விட்டில் பூச்சிகளைப் போல் பாதை மாறிச் சென்று பரிதவித்து சீரழியும் மனிதர்கள், இந்த ‘ரங்கராட்டினம்’ கதையை படிப்பதன் மூலம் தங்களின் ஆணிவேராக இருக்கும் நம் தர்மத்தின் பெருமைகளை உணர்ந்து மீண்டும் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும். நமது மூதாதையர்கள் சிலர் தீர்க்கதரிசனத்துடன் செயல்பட்டு நமது தர்மத்தைக் காத்த கதைதான் ரங்கராட்டினம். இந்த நாவலுக்கு எனக்கு கிரியா ஊக்கிகளாக இருந்தது வேளுக்குடி கிருஷ்ணனும், ‘வைஷ்ணவஸ்ரீ’ ஆசிரியர், திரு கிருஷ்ணமாச்சாரியாரும் குறிப்பாக, வைஷ்ணவஸ்ரீ அவர்கள், திருவரங்கம் ‘கோவில் ஒழுகு’ பதிவு செய்திருந்த சரித்திர நிகழ்வுகளை அழகாக Compile செய்து புத்தகமாக வெளியிட்டிருந்தார். நான் இந்த நாவலை எழுதுவதற்காக தேடிக் கொண்டிருந்த ஆதாரங்கள் சிலவற்றை இவருடைய புத்தகத்தில் கண்டேன். இதைத்தவிர, திரு. கிருஷ்ணமாச்சாரியார் என்னை அழைத்துக் கொண்டு, திருவரங்கன், கலாபத்தின் போது தங்கியிருந்த இடங்களை எனக்கு நேரிடையாக காண்பித்தார். இந்த நாவலில் வரும் ஜோதிஷ்குடி குகை, ஆனைமலை நரசிம்மர் கோவில், அழகர் கோவிலில் அரங்கன் பதுங்கியிருந்த கிணறு, திருவாய்மொழிபிள்ளை பிறந்த குந்தகை கிராமம் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்றார். வேளுக்குடி மற்றும் வைஷ்ணவஸ்ரீக்கு எனது நன்றி. மேலும் Silent Valley மேல்கோட்டை திருமலை, பகுதிகளுக்கு நான் சென்று ஆதாரங்களை தேடினேன். என் தந்தை இயக்குனர் சித்ராலயா கோபு, தாயார் நாவலாசிரியை கமலா சடகோபன் மற்றும் என் மனைவி குழந்தைகள் ஒத்துழைப்பில்லாமல் இந்த நாவலை என்னால் எழுதியிருக்க முடியாது. அன்புடன் ‘காலச்சக்கரம்’ நரசிம்மா
Book Details
Book Title ரங்கரட்டினம் (rangarattinam)
Author காலச்சக்கரம் நரசிம்மா
Publisher வானதி பதிப்பகம் (Vanathi pathipagam)
Pages 366
Year 2010
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Spirituality | ஆன்மீகம், Historical Novels | சரித்திர நாவல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha