-5 %
Available
வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹200
₹210
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் குறித்து தற்கால அறிவியலால் கண்டறியப்பட்டுள்ள அனைத்தும், அப்போதே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது வியப்பில் ஆழ்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேதங்கள், அன்றும் இன்றும் மட்டுமல்ல, என்றென்றும் நமக்கு உறுதுணை என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதங்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!’ என்ற தலைப்பில் சம்ஸ்காரங்களைப் பற்றி சாஸ்திரிகள் எழுதிய தொடர், ‘சக்தி விகட’னில் வெளிவந்தபோது அதற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பே, அவரது அளப்பரிய ஞானத்துக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளம். பண்டைய பாரதத்தின் ஒப்புயர்வற்ற வேதக் கருத்துகளை எளிய முறையில் இத்தனை சுவாரசியமாக விளக்க, இவர் போன்ற பெரியவர்களால்தான் முடியும். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசிய’த்தை முழுமையாக அறிந்துகொள்வதோடு நில்லாமல், முடிந்தவரை கடைப்பிடிக்கவும் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
Book Details | |
Book Title | வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்! (vedhangal sollum vazhkai ragasiyangkal) |
Author | சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் (Sheshadrinatha Sashtrigal) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | ஆன்மீகம் |