Menu
Your Cart

ஸ்ரீஇராமாநுசர்

ஸ்ரீஇராமாநுசர்
-5 %
ஸ்ரீஇராமாநுசர்
ம.பெ.சீனிவாசன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வைணவத்தை ஒரு பொதுஜன இயக்கமாக மாற்றிய முதல் சமயத் தலைவர் இராமாநுசர். வைணவம் ஒரு வாழும் சமயமாக, பிரபல இயக்கமாக அவர் காலத்தில் மாறியது. ‘திருமாலைப் பரம்பொருளாகக் கருதிச் சரணடைய விரும்பியவர்கள் அனைவரும் வைணவர்கள்;அவர்களுக்குள் சாதி வேற்றுமை இல்லை’ என்று கருதியவர் இராமாநுசர். இதனை வெறும் உபதேசமாக்காமல், உறுதியோடு கடைப்பிடித்துக் காட்டவும் அவர் தயங்கவில்லை. சாதியில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டவர்களைத் திருக்குலத்தாராகக் கண்டு போற்றிய இராமாநுசர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹரிஜனங்களின் ஆலயப் பிரவேசத்திற்கு அடிகோலிய மகான் ஆவார். வாழ்நாளில் அவர் செய்த சாதனைகள் பல. மனித நேயமிக்க சமயவாதியாக, சமூகப் புரட்சி-யாளராக, உயரிய மனிதப் பண்புகளுக்கெல்லாம் ஒரு பெட்டகமாக, அறிவின் எல்லை கண்ட ஒரு தத்துவ மேதையாக, சொல்லியவண்ணமே செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவராக அவர் வாழ்ந்துகாட்டினார். கி.பி. 1017ல் அவதரித்த இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டுச் சிறப்பு வெளியீடாக 2017இல் இந்நூல் வெளிவருகின்றது. இராமாநுசரின் வியப்பூட்டும் வாழ்க்கை வரலாற்றை பரவசமூட்டும் இனிய தமிழில் எழுதியுள்ளார் நூலாசிரியர் ம.பெ. சீனிவாசன். வடமொழியிலேயே நூல்கள் செய்த உடையவரைத் தமிழறிவு உடையவராக, ‘இருந்தமிழ்’ அறிந்தவராக இந்நூல் அடையாளம் காட்டுகிறது. அதற்கான ஆதரவுச் சான்றுகளை விளக்கிப் பேசுகிறது.
Book Details
Book Title ஸ்ரீஇராமாநுசர் (Sriramanujar)
Author ம.பெ.சீனிவாசன் (Ma.Pe.Seenivaasan)
ISBN 9788184937176
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 136
Year 2017
Category Hindu | இந்து மதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்... கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள..
₹204 ₹215