Menu
Your Cart

ஸ்டீஃபன் ஹாக்கிங் (Combo)

ஸ்டீஃபன் ஹாக்கிங் (Combo)
Out Of Stock
ஸ்டீஃபன் ஹாக்கிங் (Combo)
Stephen Hawking (ஆசிரியர்), PSV குமாரசாமி (தமிழில்), நலங்கிள்ளி (தமிழில்)
₹799
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் | Brief Answers to the Big Question:

  உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.

உலகின் மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் தன்னுடைய இந்த இறுதிப் புத்தகத்தில், மனிதகுலம் என்ற முறையில் நாம் எதிர்கொண்டுள்ள சவால்களையும், நாம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதையும் பற்றிய தன்னுடைய அக்கறையையும் கரிசனத்தையும் நம் அறிவுக்குத் தீனி போடுகின்ற விதத்திலும் தன்னுடைய இயல்பான நகைச்சுவையுணர்வோடும் நம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறார்.


காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் | A Brief History Of Time:

  கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான சொற்றொடர்கள் மூலம் கருத்து மாறாமல் சொல்லுவது என்பது மூளையைப் பின்னிப் பிணைந்து எடுக்கும் வேலை. திரு நலங்கிள்ளி இதனை மிகவும் திறம்படச் செய்துள்ளார். கடுமையான உழைப்பும், தளராத முயற்சிகளும் இதன் பின்னணியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார்.



Book Details
Book Title ஸ்டீஃபன் ஹாக்கிங் (Combo) (Stephen hawking combo)
Author Stephen Hawking (Stephen Hawking)
Translator நலங்கிள்ளி (Nalangilli), PSV குமாரசாமி
Publisher பனுவல் பரிந்துரைகள் (Panuval Suggestions)
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Science | அறிவியல், Essay | கட்டுரை, Combo Offer

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வாழ்வும் பணியும் - தமிழில்: பேரா ச.வின்சென்ட் : ஸ்டீபன் ஹாக்கிங்கை நோளிணி மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்..
₹550
கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் ம..
₹380 ₹400
இந்தியா: ஓர் இந்துத்துவக் கட்டமைப்பு - நலங்கிள்ளி :• ஆரிய சமஸ்கிருதக் குடும்பத்தின் இந்தியைத் திணிப்பதே இந்தியம் என்றால், அதனை எதிர்ப்பதே சரியான இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கை. சாரத்தில் உண்மையான இடதுசாரிக் கொள்கை.’• ‘தமிழர் வரலாற்றில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ கிஞ்சிற..
₹214 ₹225