Menu
Your Cart

ஸ்டோரிபோர்ட் A-Z

ஸ்டோரிபோர்ட் A-Z
-5 % Out Of Stock
ஸ்டோரிபோர்ட் A-Z
எஸ்சி லானோம் (ஆசிரியர்), மேத்யூ டெய்லர் (ஆசிரியர்), தீஷா (தமிழில்)
₹285
₹300
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நடிகர்கள் நடிப்பதற்கு முன், ஒத்திகை செய்வதுபோல, படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்வதற்கு முன், தான் எடுக்கப்போகிற திரைப்படத்தின் காட்சியமைப்புகள் குறித்துத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள இயக்குனர்கள் ஸ்டோரிபோர்டுகளின் வாயிலாக ஒத்திகை செய்துகொள்கின்றனர். ஒரு காட்சிக்கான ஸ்டோரிபோர்ட் வரைவதில் உள்ள படிநிலைகள், ஸ்டோரிபோர்ட் வரைவதற்கு முன்னால் அக்குறிப்பிட்ட காட்சி குறித்து, உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டிய தகவல்கள், மென்பொருள் / காகிதம் இவற்றில், நீங்கள் ஸ்டோரிபோர்ட் வரைவதற்குப் பின்பற்றவேண்டிய சரியான முறை, என இப்புத்தகம் உங்களின் பல சந்தேகங்களுக்குத் தீர்வாக அமைகிறது. மேலும், ஸ்டோரிபோர்டுகள் வாயிலாக மிகச்சிறந்த காட்சியமைப்பைச் சாத்தியப்படுத்தியிருக்கிற பல திரைப்படங்களின் உதாரணங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால், ஸ்டோரிபோர்டிலிருந்து காட்சியாக மாறுகையில், அவை எத்தகைய பரிணாமங்களைக் கடந்துவந்திருக்கின்றன, என்ற புரிதல் இப்புத்தகத்தின் மூலம் உங்களுக்குக் கிடைக்கிறது. ‘ஸ்டோரிபோர்ட்’ உருவாக்குவதன் மூலமாக, நாம் எதையெல்லாம் சாதிக்க முடியும்? ·மிகச்சரியான திட்டமிடல் மற்றும் பண வரவு – செலவுத் திட்டத்தில் வீண் விரயத்தைத் தவிர்த்தல். ·திரைப்படம் என்பது பல தொழில்நுட்பக் கூறுகள் ஒன்றிணைவதால் உருவாவது. படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, அரங்க வடிவமைப்பு என இதுபோன்ற பல துறைகளில் உள்ளவர்களுக்கும், தான் எடுக்க நினைக்கிற சினிமாவின் காட்சிப்பரிமாணப் புரிதலை வழங்குவதற்கு ஸ்டோரிபோர்டுகள் உதவுகின்றன. அதாவது, காட்சிரீதியாக உங்கள் பக்க நியாயங்களை, படத்தில் பணியாற்றுகிற பிற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் புரியும்படியாக எடுத்துரைக்கலாம். ·’ஸ்டோரிபோர்ட்’ போன்ற முறையான திட்டமிடலுடன் படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்கிறபொழுது, நம்மால் காட்சிக்கு என்ன தேவையோ, அதை மட்டும் விரைவாகப் படம்பிடிக்க முடிகிறது. ·காட்சி சார்ந்த தெளிவான பார்வை ஸ்டோரிபோர்ட் மூலமாக உங்களுக்குக் கிடைப்பதால், படப்பிடிப்பில் எழும் தேவையற்ற சிக்கல்களையும், குழப்பங்களையும் தவிர்க்கிறீர்கள். ·காட்சியமைப்பில் கலை மற்றும் அழகியல் பார்வை சீராக உள்ளதை அறிந்துகொள்ளவும், அல்லது காட்சித்தொடர் (continuity) விடுபடுகிறது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, பிழைகளைத் திருத்திக்கொள்ளவும் ஸ்டோரிபோர்டுகள் பயன்படுகின்றன. ·தயாரிப்பாளரின் பணத்தை விரயமாக்காமல், காட்சி ரீதியிலான பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்ப்பது ஸ்டோரிபோர்டுகளின் உதவியால்தான் சாத்தியமாகின்றன.
Book Details
Book Title ஸ்டோரிபோர்ட் A-Z (Story Board)
Author மேத்யூ டெய்லர், எஸ்சி லானோம்
Translator தீஷா (Theeshaa)
Publisher பேசாமொழி (pesamoli)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha