Menu
Your Cart

சுடர்கள் ஏற்றும் சுடர்

சுடர்கள் ஏற்றும் சுடர்
-5 % Available
சுடர்கள் ஏற்றும் சுடர்
பொன்னீலன் (ஆசிரியர்)
₹152
₹160
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தமிழிலக்கிய ஆராய்ச்சி, முற்போக்கு இலக்கிய விமர்சனம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. 1969 -இல் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்காக அவர் தொடங்கி நடத்திய "ஆராய்ச்சி' இதழின் பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது. இந்நூலாசிரியர் பொன்னீலன், தனது இளமைப் பருவத்தில் இருந்தே நா.வானமாமலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பல இயக்கங்களில், பணிகளில் பங்கு கொண்டிருந்திருக்கிறார். அதனால் நா. வானமாமலையுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களைப் பற்றியும், அவருடைய தொடர்பால் தங்களை வளர்த்துக் கொண்டவர்களைப் பற்றி மிகச் சுவையாக இந்நூலில் அவரால் பதிவு செய்ய முடிகிறது. நா.வானமாமலை செய்து வந்த ஆசிரியர் பணியை அவருடைய 30 வயதில் துறந்தது, 1948 இல் தனிப்பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கியது, பொதுவுடமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றது, 1957 தோழர் நல்லகண்ணுவின் திருமணத்துக்கு தலைமை தாங்கியது, நாட்டுப்புற இலக்கியங்களில் ஆர்வம் கொண்டு அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்தது, ஆராய்ச்சிகள் மேற்கொண்டது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் செயல்பட்டது, அவர் எழுதிய மார்க்சீய நூல்கள், நாட்டுப்புற இலக்கியத் தொகுப்பு, நாட்டுப்புற ஆராய்ச்சி நூல்கள், சமகால இலக்கிய விமர்சனங்கள் என நா.வானமாமலையின் அரிய பணிகள் எல்லாவற்றையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.
Book Details
Book Title சுடர்கள் ஏற்றும் சுடர் (Sudargal Yetrum Sudar)
Author பொன்னீலன் (Ponneelan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 190
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha