- Edition: 1
- Year: 2015
- Page: 224
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சுதர்சன் புக்ஸ்
குதிரை இல்லாத ராஜகுமாரன்
எழுபதுகளிலான இழத்து எழுத்துலகப் பரப்பில் ஆழமாய்த் தடம் பதித்த படைப்பாளிகளில் ஒருவரான ராஜாஜி ராஜகோபாலன் அண்மைக் காலம்வரை எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் கோலங்களை அலாதியான வர்ணனைகளுடனும் நுட்பமான அவதானிப்புடனும் தனக்கேயுரிய தமிழ் நடையிலும் இடையிடையே எள்ளலும் காதலும் கனிவும் ததும்பும் சொற்சித்திரங்களுடனும் கதைமாந்தர்களின் உரையாடல்களில் இயல்பாகவே இடம்பெறும் பிரதேசப் பேச்சு வழக்கில் வாசகர் மனம் கட்டுண்டு வாசிப்புச் சுகத்தை முழுமையாய் நுகரும்படியாகவும் நுட்பமாய்க் கதையை நகர்த்திச் செல்லும் உத்தியில் ராஜாஜி கவர்ச்சியான தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்த மண்ணின் பலவகையான களங்களிலும் வெவ்வேறு சூழல்களிலும் இவருக்கேயுரிய அதிசயிப்புடனான கண்ணோட்டத்திலும் மானுட நேசிப்பினூடான அணுகல் முறையிலும் கருக்கொண்ட இக்கதைகள் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் மத்தியில் இவருடைய எழுத்தின் முதிர்ச்சிக்குச் சான்றாக அமைகின்றன.
Book Details | |
Book Title | குதிரை இல்லாத ராஜகுமாரன் (Kuthirai Illaatha Rajakumaran) |
Author | ராஜாஜி கோபாலன் (Raajaaji Kopaalan) |
Publisher | சுதர்சன் புக்ஸ் (Sudharsan) |
Pages | 224 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |