Menu
Your Cart

பட்டு

பட்டு
-5 %
பட்டு
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“திரும்பி வா. இல்லையென்றால் இறந்துவிடுவேன்” * முன்னாள் ராணுவத்தினனான ஹெர்வே ஜான்கர் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து உலகின் கடைசியான ஜப்பானுக்குப் போகிறான். தரமான பட்டுப் புழுக்களைக் கொள்முதல் செய்வது அவன் நோக்கம். அங்கே புதிரான சூழலில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். தொடாமலும் பேசாமலும் அவர்களுக்குள் வளரும் உறவு நாடு திரும்பியும் அவனை வசீகரிக்கிறது. மீண்டும் மீண்டும் கடல் கடந்து செல்கிறான். அவள் ரகசியமாகக் கொடுக்கும் கடிதம் அவனை அலைக்கழிக்கிறது. அது அவனால் வாசிக்க முடியாத மொழியில் எழுதப்பட்டது. வாசிக்க வைத்துத் தெரிந்துகொண்ட பின்பு அதில் மறைந்திருக்கும் மர்மம் அவனை வசியப்படுத்துகிறது. திகைப்படையச் செய்கிறது. * பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் ஓர் உருவகக் கதையாகவும் வரலாற்றுப் புனைவாகவும் காதல் கதையாகவும் காமத்தின் தேடலாகவும் பவுத்த தரிசனமாகவும் வெவ்வேறு வடிவம் கொள்கிறது. * இருபதுக்கும் அதிகமான உலக மொழிகளில் பெயர்க்கப்பட்ட அலெசான்ட்ரோ பாரிக்கோவின் இத்தாலிய மொழி நாவல் பிரெஞ்சு - கனடிய இயக்குநர் ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.
Book Details
Book Title பட்டு (Pattu)
Author அலெசான்ட்ரோ பாரிக்கோ (Alessandro Baricco)
Translator சுகுமாறன் (Sukumaran)
ISBN 9789381969649
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 120
Published On Nov 2011
Year 2014
Edition 2
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்தைச் சேர்ந்த ஏழு தலைமுறைகள் அந்த நகரத்தின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் அழிவுக்கும் மையமாகவும் விரிவாகவும் அமைகின்றன. உற..
₹523 ₹550
துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக..
₹124 ₹130
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள்..
₹95 ₹100
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் - படுத்தாமல் அனுபவ உணர்வுகளின் சாராம்சத்தால் கூர்மையடைந்து மன உணர்வுகளில் பாய்ந்து அதிர்வடையச் செய்கின்றன. இதற்கேற்ப செறிவான படிமங்க..
₹119 ₹125