Menu
Your Cart

அழகின் வரைபடங்கள்

அழகின் வரைபடங்கள்
-5 %
அழகின் வரைபடங்கள்
சுந்தரபுத்தன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பைத் திறந்துவிட்டிருக்கிறது. அதில் சிலர் எழுதுவதைத்தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்லமுடிகிறது. ரசிக்கவும் முடிகிறது. இயற்கையைப் பற்றியோ சமூக நிகழ்வைப் பற்றியோ சந்தித்த நபரைப் பற்றியோ எதுவாக இருந்தாலும், அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அங்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன். தன்னுடைய அனுபவங்களை எழுதும்போது, அவை தன்னைப் பற்றியதாக மட்டும் இருப்பதில்லை. அருவியை, அழகிய மூணாரைப் பற்றி எழுதும்போது இயற்கையின் ஒரு பகுதியாக அவர் இருப்பதால், இன்றைய இயற்கைச் சூழல் பற்றிய பதிவாகவும் அது மாறிவிடுகிறது. சமூக நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுதும்போது, சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் சமூக வரலாறாகவும், அவர் வாழும் இன்றைய காலகட்டத்தின் இயல்பாகவும், அவரோடு வாழ நேர்ந்த மனிதர்களின் சித்திரிப்பாகவும் இருக்கிறது. இதனை சுந்தரபுத்தனின் பதிவுகளில் தெளிவாக உணரமுடியும். பயணக்குறிப்புகள் பற்றி அவரிடம் பேசும்போது, பல ஆயிரம் ஆண்டுகளாக கீழே வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியின் முன் நாமெல்லாம் ஒரு தூசு என்றார். இந்தப் பார்வைதான்.
Book Details
Book Title அழகின் வரைபடங்கள் (Azhagin varaipadangal)
Author சுந்தரபுத்தன் (Sundharaputhan)
Publisher தமிழ்வெளி வெளியீடு (Tamizhveli Veliyeedu)
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பிராயம் அழகான ஓவியமாக மனத்தில் இருக்கிறது. நினைக்கும்போதெல்லாம் இனிமை சேர்க்கும் பால்ய ஞாபகங்கள் அவை. ‘அந்தக் காலம்' என்று பேசப்படும் பள்ளிப்பிராயம் வற்றாத ஜீவநதியாக மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த மீட்டெடுக்கமுடியாத பள்ளிப்பொழுதுகளை இங்கே பலரும் நினைவு கூறப் போக..
₹190 ₹200
கண்ணாடி தேக காங்க்ரிட் வன சென்னை மாநகரில் தன் சொந்த கிராமத்தின் வேர்களை தேடியபடியான பழம்பெரும் ஞாபகங்களில் கண்டடைந்த இந்நூலில் தன் நஞ்சைப் பூதலத்தின் பச்சைய எழுத்துக்களை கால பிம்பங்களாய் உலவவிட்டபடி நகர்கிறது சுந்தரபுத்தனின் தூரிகைப்பேனா.....
₹114 ₹120