Menu
Your Cart

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு
-5 %
சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு
ப‌.திருமாவேலன் (ஆசிரியர்)
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இன்றல்ல நேற்றல்ல... மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே நெருங்கிய தொடர்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. வாணிபம் செய்ய வந்த பிரிட்டிஷாரிடமும், பிரெஞ்சுக்காரரிடமும் இந்தியாவை யார், எவ்வளவு சுரண்டுவது என்ற கொள்ளையடிக்கும் போட்டி 17&ம் நூற்றாண்டில் இருந்தே நடந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டால் நாடு தவித்தபோது அவற்றை விநியோகத்ததில் பெரும் ஊழல் நடந்தது. இதுபோன்ற சுரண்டல்களைத் தடுக்க, இந்தியா விடுதலை பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே 1947&ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஊழல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. உண்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு வரும்போது காலனிய ஆட்சிக்காலத்தில் காணப்படும் அனைத்துவித லஞ்ச லாவண்யங்களும் காணாமல் போகும் என அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினர். ஆனால், நடந்தது என்ன? இன்னமும் நாட்டின் பெரும் பிரச்னையாக ஊழல் உள்ளது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறது. தேசத்தந்தை மகாத்மாவின் பெயரால் ஊழல் ஓங்கி ஒலித்தது. ஆம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம் மற்றும் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் ஆகியவை ஊழலுக்குத் துணை போயின. மக்களுக்கான திட்டங்களில் சுரண்டல்கள் தொடங்கின. விடுதலை அடைந்தது முதல் மன்மோகன்சிங் காலம் வரை இந்தியாவில் ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போய் இருக்கிறது என்பதை துல்லியமாக அலசி துவைத்தெடுக்கிறது இந்த நூல். இந்திய துணைக்கண்டத்தில் சுரண்டல் எதுவரை பாய்ந்திருக்கிறது? அதன் வீச்சு தேசத்தை எங்கே அழைத்துச் செல்கிறது என்பதை உணர்வுபூர்வமாக, எடுத்துக்காட்டுக்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். நம் தேசத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஊழலுக்கும் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன? ஊழலின் ஊற்றுக்கண் யார்? சுரண்டல்காரர்கள் நம் தேசத்தை சுரண்டியது எப்படி? எளிமையான நடையில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர். சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாற்றைப் படியுங்கள். தேசம் களவு போவதை கண்டுபிடித்துக் கொள்வீர்கள்.
Book Details
Book Title சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (Suthesi Thesam Surandapadum Varalaru)
Author ப‌.திருமாவேலன் (P.Thirumavelan)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தங்கள் கடமைகளைச் செய்வதற்கே லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும், அமைச்சர்களும் உள்ள இந்த நாட்டில் ‘அரசியல்வாதிகளாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் அரசியலைத் திருத்த முடியாது’ என்ற வரிகள்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. குடும்ப அரசியல், ‘நட்பு’ அரசியல், வாரிசு அரசியல், சினிமா அரசியல் என்று அத்தனை வகை அரசியல்கள..
₹128 ₹135
ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - ப. திருமாவேலன் :..
₹428 ₹450
அரசியல் களம்; தன்னலமில்லா தலைவர்களையும் பார்த்திருக்கிறது, தன்னலம் மட்டும்கொண்ட தலைவர்களையும் பார்த்திருக்கிறது, மக்கள் தொண்டுக்காகவே வாழ்ந்த தலைவர்களையும் கண்டிருக்கிறது, அந்த மக்கள் ஆதரவை மடைமாற்றிக்கொண்டு லாபம் கண்ட தலைவர்களையும் கண்டிருக்கிறது. மக்களுக்காக மட்டுமே உழைத்த மாசற்றவர்களையும் சந்தித்..
₹195 ₹205