Menu
Your Cart

சுயமரியாதை

சுயமரியாதை
-5 %
சுயமரியாதை
₹128
₹135
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் புதிய தலைமுறைக்குச் சுவைபடச் சொல்லும் நூல் இது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திராவிட இயக்கம் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும் சுவாரசியமாக உரையாடும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் எழுதிய தொடரே இப்போது நூலாகியுள்ளது. சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பல்வேறு நிலைப்பாடுகளைப் பற்றியும் இந்நூலின் அத்தியாயங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார் ஆசிரியர் சுப. வீ ஆனால், கூறலின் தன்மை காரணமாக அந்த வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வாசகருக்கு ஏற்படும் என்பது திண்ணம். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு போன்ற விஷயங்களின் பின்னணியில் புதைந்துள்ள அம்சங்களை எளிய நடையில் புரியும் வகையில் எடுத்து வைத்துள்ளார் பேராசிரியர். திராவிட இயக்கம் பற்றிப் பரவலாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது என்பதே இந்த நூலைத் தனித்துக் காட்டுகிறது.
Book Details
Book Title சுயமரியாதை (Suyamariyaathai (oru noottrandin sol))
Author சுப வீரபாண்டியன்
ISBN 9789385125386
Publisher நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications)
Pages 152
Published On Jan 2016
Year 2016
Edition 2
Format Paper Back
Category Politics| அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" எனச் சொல்வது ஒரு சொல் அல்ல! அது ஒரு வைரக் கல்! ஆம், பட்டை தீட்டப்பட்ட வைரக் கல்! கலைஞர்..
₹114 ₹120