-5 %
ப்ரம்மா (சுயம்புகளின் கதை)
கேபிள் சங்கர் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
உண்மைகளோடு இழைபின்னிப் பிணையும் புனைவின் சுவாரசியம்
தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு ஒரு புரட்சி - கேபிள் டிவி. வித விதமான சினிமா நிகழ்ச்சிகளை வீட்டிற்குள்ளேயே கொண்டுவந்த கேபிள் ஒளிப் பகிர்வு அவர்களுக்கு ஒரு வரம். கொடைக்கானலில் இருந்து இருந்து ஒளிபரப்பப்படும் கொஞ்சூண்டு தமிழ் நிகழ்ச்சிகளை (வயலும் வாழ்வும்) வேதனையான சுவாரசியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு இன்ப இதய அதிர்ச்சியைக் கொடுத்த தொழில்நுட்பத் திருப்புமுனை.
தனித்துவத்தோடு இயங்கும் அந்தத் துறையைப் பற்றி ஆழமாகப் பேசும் புத்தகங்கள் இல்லை. ஒன்றிரண்டு இருந்தால் அதை எழுதியவர் இந்நூலின் ஆசிரியர் கேபிள் சங்கர். அந்தக் காரணத்தாலேயே கேபிள் விநியோகம் பற்றி எழுத கேபிள் சங்கருக்கு உறுத்து உண்டு. ஆனால், அது மட்டுமே இவரது தகுதி அல்ல. கேபிள் துறையின் ஒவ்வொரு இண்டு இடுக்கையும் அடிமட்டம் வரைக்கும் இறங்கி அலசி ஆராய்ந்து, புதினமானவையும் ஆழமானவையுமான தகவல்களை உள்ளங்கையில் வைத்திருப்பவர்.
எந்தத் துறை பற்றி ஒரு புத்தகம் எழுதப்பட்டாலும் அதில் ஏதேனும் விடுபடல் இருக்கக்கூடும். இந்தப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள்… ஒன்று பாக்கியில்லாமல் சேர்த்திருக்கிறார். புத்தக விளம்பரத்துக்காக, ‘இந்நூலில் விடுபட்டிருக்கும் ஏதேனும் ஒரு விவரத்தைச் சொல்லுங்கள்’ என்று பரிசுப் போட்டிகூட அறிவிக்கலாம் என்று தோன்றுகிறது.
இந்த இடத்தில், ஒரு முட்டுக்கட்டை போடுவோம்… இதுவரை சொன்னதைப் பார்த்தால் இது ஏதோ ஒரு தொழில் துறை விவரணக் கையேடு என்பது மாதிரித் தோன்றுகிறது அல்லவா… அங்கேதான் நூலாசிரியர் நிமிர்ந்து நிற்கிறார். இது ஒரு த்ரில்லர் வகைக் கதை என்கிற அளவில் சுவாரசியங்களையும் திருப்பங்களையும் வைத்து திக்திக் நாவலாகத் தந்திருக்கிறார். மோதிரக் கைகள்கூட, குட்டு கொடுக்க வேண்டியதிருக்காது. ஷொட்டுதான்.
கேபிள் தொழிலின் பிற்காலப் பிரகாசத்தை உணர்ந்த ஒரு சாமானிய இளைஞன் அதில் இறங்க விரும்புகிறான். அவனது எளிய வாழ்வு, தொழில் முனைவில் அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள், பயங்கரங்கள், ஆதரவளிக்கும் நண்பர், காதலி…
இதே தொழிலில் சாம்ராஜ்யத்தை நிறுவிவிடும் கனவோடு ஒரு பெருந்தலை. எதற்கும் துணிந்த, எதையும் விலையால் அடித்துவிட வல்ல அரசியல் செல்வாக்குள்ள ஒரு புள்ளி. எளியவர்களைக் கபளீகரம் செய்துவிட்டு தான் கண்ட கனவை ஸ்தூலமாக நிர்மாணித்துவிடுகிற வெறியோடு அந்தப் புள்ளி ஆடும் வெறியாட்டு…
பெரும்பணம் கொழிக்கும் தொழில், அதை விழுங்க விரும்பும் அரசியல் இவையெல்லாம் இருந்தால் தவிர்க்க இயலாமல் இன்னொன்று வந்து சேரும். அது மாஃபியா என்பது உங்களுக்கே தெரியும். அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ரத்த கேங் மற்றும் அதன் தலைவர்கள். அவர்களுக்குள் மோதல்கள்…
ஒவ்வொன்றுமே மனித மன நாடகங்களுடனான தனித் தனிச் சித்திரங்கள். கதையின் செம்பாதியில் இவை ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும்போது சுவாரசியம் தூக்கிவிடாதா…?
வீட்டிலிருந்து வெளியே போய் தேநீர் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதை இருபது நிமிடங்களுக்குச் சிரிக்கச் சிரிக்க உரையாடிவிடுபவர் கேபிள் சங்கர். இவ்வளவு சம்பவங்கள் கைவசம் இருந்தால் என்ன செய்வார்? இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள் உங்களுக்கு விடை கிடைக்கும்.
விறுவிறு பரபர சம்பவங்கள். கொலைகள், துரோகங்கள், கீழ்மைகள், இவற்றின் ஊடாகப் பூக்கள் பூக்கும் தருணம்… இவற்றின் கலவை இந்தப் புத்தகம். இவற்றோடு, இன்னொரு சுவாரசியமும் உண்டு. உண்மைகளில் இருந்து கிளைத்து எழுந்த புனைவு என்பதால் எது உண்மை, எது புனைவு என்கிற மயக்கம் ஓர் ஈர்ப்பு. எந்தப் பாத்திரம் நிஜ வாழ்வில் யாரைக் குறிக்கிறது என்று கண்டுபிடிப்பது ஒரு விளையாட்டு.
வாசியுங்கள்.
Book Details | |
Book Title | ப்ரம்மா (சுயம்புகளின் கதை) (brahmma-suyambugalin-kathai) |
Author | கேபிள் சங்கர் (Cable Shankar) |
Publisher | ஸ்வாஸ் பப்ளிகேஷன்ஸ் (Swas publications) |
Published On | Sep 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், New Releases | புது வரவுகள் |