-4 %
ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்
₹48
₹50
- Year: 2014
- ISBN: 9789383661510
- Page: 62
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில் தேவைப்படும் மாற்றங்களை விரிவாகப் பேசுகிறது இது. இருபத்தியொரு தலைப்புகளின் கீழ், குழந்தைகள் பற்றிய ஒளிமிக்க புதிய பார்வையைத் தரும் விதத்திலான செய்திகளை அடக்கியுள்ளது இந்நூல். குழந்தைகள் போடும் சத்தமே பெற்றோருக்கு வேதனை தரக்கூடியது. இது பற்றிப் பேசும் கோச்சார்க், குழந்தை நடக்கும்போது நடக்கும், கடிக்கும்போது கடிக்கும் என்று சொல்கிறார். ‘எல்லா நரிகளும் தந்திரம் மிக்கதா, நிழல் என்றால் என்ன, கடவுள் யார், எப் படி இருப்பார்?’ போன்ற குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்கள் மட்டத்திற்கு இறங்கி வந்து அவர்களிடம் பேசிப் புரிய வைப்பதே சிறந்தது என்று அவர் கூறுகிறார். வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கு எல்லா விஷயங்களும் புரிந்திருப்பதில்லை ஆனால் அவர்கள் எல்லாவற்றுடனும் எதிர்நீச்சல் போடத் தீர்மானித்து விடுகிறார்கள் என்கிறார் கோச்சார்க். ஆகவே அவர்களின் விருப்பத்தையும் இசைவையும் கேட்டு ஆலோசனைகள் கூறவேண்டும் என அறிவுறுத்துகிறார் அவர். ‘படிப்பு என்பது தெரிந்துகொள்ளவா? இல்லை. மேலும் மேலும் கேள்வி கேட்க’ என்று தெரிவிக்கும் கோச்சார்க் குழந்தை களை அணுகும் முறையில் மாற்றம் ஏற்பட்டால் கல்வியிலும் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வாசிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும் யதார்த்தத்தை வெளிப்படுத்துவதாகவும் எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இந்நூல் அமைந்துள்ளது.
Book Details | |
Book Title | ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் (Ovvoru Kuzhanthaiyaiyum Nesippom) |
Author | ஜேனஸ் கோர்ச்சாக் (Janes Korchac) |
Translator | தி.தனபால் (T.Dhanabal) |
ISBN | 9789383661510 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 62 |
Year | 2014 |