Menu
Your Cart

கலை மெய்மை அரசியல்

கலை மெய்மை அரசியல்
-5 % Out Of Stock
கலை மெய்மை அரசியல்
Categories: Art | கலை
₹19
₹20
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கிழக்கு இலண்டனிலுள்ள ஹக்னி எனும் இடத்தில 1930 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் பிறந்த பின்ட்டருக்குத் தற்போது 77 வயது நிறைகிறது. தொழிலாளி வர்க்கக் குடும்பத்தில் பிறந்த பின்ட்டரின் தகப்பனார் ஒரு தையற்காரர் ஆவார். மிகுந்த ஒழுக்கவாதியான தந்தையை விடவும் தாயிடமே அதிகமும் நெருக்கம் கொண்டவராகப் பின்ட்டர் வளர்ந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தில் குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக இலண்டனுக்கு வெளியில் கிராம்வெல் எனும் இடத்தில் பிற சிறுவர்களோடு மூன்று ஆண்டுகள் அவர் வாழ நேர்ந்தது. குடும்பத்திலிருந்த பிரிந்து வாழ நேர்ந்த அந்த சிறுபிள்ளைப் பருவமும் குண்டுவீச்சின் சத்தமும் தன்னால் மறக்கவியலாதவை என்கிறார் பின்ட்டர். பின்ட்டர் நாடகமும் நடிப்பும் பயின்றார். பயிலும் போதே அடங்கமறுத்தமைக்காகக் கல்லூரி ஒழுக்கநடவடிக்கைக்கு ஆளானார் பின்ட்டர். பிரித்தானியப் படையில் சேர மறுத்தமைக்காக வழக்குமன்றத்தில் அபராதத் தொகையைக் கட்டியவராகவும், என்றும் போரை வெறுத்தவராகவுமே அவர் இருந்தார். ஐரோப்பாவின் பெரும்பாலுமான சிந்தனையாளர்கள் போலவே பின்டரும் யூதவழித் தோன்றல் என்பதும் நாவலாசிரியான அன்டோனியோ பிரேசர் இவரது துணைவியார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்ட்டர் கான்ஸர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். மரணத்தின் விளம்புக்குச் சென்று மீண்டதாகவும், ஒரு நிமிடம் ‘நான் மரணத்தின் பிடியிலும் மறுநிமிடம் நான் வாழ்வின் மடியிலும் இருந்தேன்’ எனவும் இது குறித்துக் குறிப்பிடுகிறார் அவர். நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அயர்லாந்தில் தனக்குக் கௌரவமளிக்க நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு இங்கிலாந்து திரும்பிக் கொண்டிருந்த வேளை, டப்ளின் நகரத்துப் பிளாட்பாரத்தில் விழுந்து தனது முகத்தை உடைத்துக் கொண்டார் அவர். நோயினால் உடல் தளர்வுற்ற நிலையில் அவருக்குக் கிடைத்த நோபல் விருது அவரது படைப்பு வாழ்வில் அவருக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதில் எவருக்கும் முரண்பாடிருக்க நியாயமில்லை.
Book Details
Book Title கலை மெய்மை அரசியல் (Kalai Meymai Arasiyal)
Author ஹெரால்ட் பின்ட்டர் (Heraalt Pinttar)
Translator யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran)
ISBN 9788123422441
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 32
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி.  ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபி..
₹200 ₹210
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு‘மார்க்சியமே மனித விடுதலையின் வற்றாத ஜீவ ஊற்று’ என நான் நம்புவதால் கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம், பொருளியல் இன்னபிற அறிவுத்துறைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தவை, மனிதகுல விடுதலையில் பிணைந்தவை என்பதே என் நிலைபாடு. கவிஞன், நாவலாசிரியன், கலைஞன், விமர்சகன், மொழிபெ..
₹285 ₹300
பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன்..
₹143 ₹150