Menu
Your Cart

இலங்கையில் சமாதானம் பேசுதல் (இரண்டு தொகுதிகள்)

இலங்கையில் சமாதானம் பேசுதல் (இரண்டு தொகுதிகள்)
-5 %
இலங்கையில் சமாதானம் பேசுதல் (இரண்டு தொகுதிகள்)
Categories: Eezham | ஈழம்
₹941
₹990
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமாதானத்தை முன்னெடுத்தவர்களின் முக்கியமான ஆய்வுகள் இறுதியாக நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமாயின், தமது கடந்தகாலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்றிருப்பவர்களும் அந்தத் தவறுகளை மீண்டும் செய்வதில்லை என உறுதிபூண்டிருப்பவர்களும் மேற்கொள்ள வேண்டிய, கவனமானதும் கடினமானதுமான பேச்சுவார்த்தைகளின் மூலமே அதை அடைய முடியும். - குமார் ரூபசிங்க தவறான மிகை நம்பிக்கை கொண்ட தகவல்கள், அறிவுரைகள் ஆகிவற்றின் அடிப்படையில் கையொப்பமிடுவதற்கு ராஜீவ்காந்தி தீர்மானித்ததால்தான் இந்திய இலங்கை ஒப்பந்தம் தோல்வியுற்றது. - ஜே.என். தீட்சித் ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் பிரிவினை என்னும் மொழி சமாதானம், செழிப்பு ஆகியவற்றை நோக்கி ஒன்றோடொன்று சார்ந்துள்ள வளர்ச்சியின் வேராகச் சுதந்திரம் மாற்றமடையும். இதை முதிர்ச்சி நிலையாகவன்றி, ஓர் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுவது அவப்பேறு. - ஏ.ஜே.வி. சந்திரகாந்தன் பேச்சுவார்த்தைகளுக்காக இனங்காணப்பட்டுள்ள முதன்மையான தடைகளுள் ஒன்று, சமாதானத்திற்கான தேடலில் தொழில்வாண்மைத்துவம் இல்லாதிருப்பது. ஜெஹான் பெரேரா பல ஆண்டுகளாக உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் காரணமாக இருக்கும் ஆயுதப் பூசல், அதில் தொடர்புள்ளவர்கள் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தி, அரசியல் தீர்வை நாடுவதில் விட்டுக் கொடுப்புகளை மேற்கொள்ளாதபோது இன்னும் பல ஆண்டுகள் தொடரவே செய்யும். - பி. இராஜநாயகம் ‘சமாதான முன்னெடுப்பு’ ஒன்றை ஒரு ‘சமாதான நடைமுறை’யாக மாற்றுவது சிரமமானதொரு பயணம். வெளியிலிருந்து வரும் உள்ளீடுகள் உரிய பயனை வளர்ப்பதற்கு உள்ளூர் நிலைமைகளும் முக்கியம். - ஜயதேவ உயன்கொட
Book Details
Book Title இலங்கையில் சமாதானம் பேசுதல் (இரண்டு தொகுதிகள்) (Ilangaiyil samathanam pesuthal)
Author கலாநிதி குமார் ரூபசிங்க
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள், ஈழம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha