ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதையைச் சொல்லும் இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச் சென்று மறக்கப்பட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார். துயரத்தின் பெருவலியை பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்கு புதியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன..
இரண்டாவது ஈழப்போரின்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
இதிலுள்ள கவிதைகள், ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப்போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவு செய்கின..
தேவஅபிராவின் மொழி எளிமையானது. சிக்கலற்ற தெளிந்த நீரருவிபோலத் தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. நேரடியாகவே அதில் இறங்கி அதன் குளிர்மையை, ஓட்ட வேகத்தை, ஆழத்தை, எளிமையை உணர்ந்தபடியே யாரும் அதை அள்ளிப் பருக முடியும். அதில் நீங்கள் ..
இலங்கையின் கடந்த இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு எண்ணற்ற மோதல்களாலும், படுகொலைகளாலும், குண்டுவெடிப்புகளாலும், ராணுவ நடவடிக்கைகளாலும் மட்டுமே நிறைந்துள்ளது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின் விளைவே விடுதலைப் புலிகள் இயக்கம். புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திவந்த போர், மக..
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2009 கோடையில் கொல்லப்பட்டார். இலங்கையில் நடந்த விடாப்பிடியான, சிக்கல் நிறைந்த போர் ரத்தமயமான முடிவுக்கு வந்தது. சுமார் 30 வருடங்களாக நடந்த போரின் கொடூரக் கரங்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தன் கோர நகத்தைப் பதித்திருக்கிறது. தேசம் முழுவதிலுமான பௌத்த மடாலயங..
ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் ..
இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும் என்னும் பொதுத் தலைப்பில் பதினைந்து கட்டுரைக்களைத் தாங்கிவரும் இந்நூல் இலங்கையின் சிங்கள தமிழ்ச் சமூகங்களின் சாதிக்கட்டமைப்பு பற்றிச் சமூகவியல், மானிடவியல் அடிப்படையில் விரிவாக எடுத்துரைக்கிறது. இலங்கையின் தென்பகுதிக் கரையோர மாகாணங்களினதும் கண்டி, யாழ்ப்பாணம். மட்..