-100 %
Out Of Stock
பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்
ச.இராசமாணிக்கம் (ஆசிரியர்)
Categories:
Government - Administration | அரசு - நிர்வாகம்
₹0
- Year: 2014
- ISBN: 9789384915148
- Page: 144
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமது அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே காணப்படவில்லை. நிதிநிலை அறிக்கை என்ற சொல்தான் காணப்படுகிறது. சட்டத்தில் இல்லாத சொல் எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. இதைப்போலவே பாரளுமன்ற கமிட்டி என்ற சொல்லுக்கு எந்த விளக்கமும் அரசியல் சட்டத்தில் இல்லை. ஜீரோநேரம் (Zero hour) என்ற சொல் பாரளுமன்ற விதிகளில் இல்லை. கேள்வி நேரம் முடிந்த பிறகு அதன் தொடர்ச்சியாக வருவது “நேரமில்லாநேரம்” (non existing hour) என்ற ஜீரோநேரம். இந்தச் சொல் பத்திரிகைகாரர்களின் கற்பனையில் உருவான சொல். கொறடா என்ற சொல்லும் அரசியல் சட்டத்தில் இல்லை. பாராளுமன்ற நடைமுறை விதிகளிலும் இல்லை. 1985ஆம் ஆண்டு 52வது சட்டத்திருத்தம் அதாவது கட்சித்தாவல் தடைச்சட்டம் வந்த பிறகுதான் கொறடா என்ற பதவிக்கு தேவை ஏற்பட்டது. அரசியல் சட்டத்தில் இல்லாத சொல் அவசியம் கருதி வழக்கத்திற்கு வந்தது. பெடரேஷன் என்ற சொல் அரசியல் சட்டத்தில் இல்லை. அரசியல் நிர்ணய சபையில் இந்திய ஆட்சி அமைப்பை பெடரேஷன் என்று குறிப்பிட வேண்டுமென்று ஒரு உறுப்பினர் குறிப்பிட்டபோது அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் பிரிவு I இந்தியாவை “யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் (union of states) என்று குறிப்பிடுகிறது. - ச. இராசமாணிக்கம்
Book Details | |
Book Title | பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும் (Paaraalumandra Nadaimuraigalum Marabugalum) |
Author | ச.இராசமாணிக்கம் (Sa.Iraasamaanikkam) |
ISBN | 9789384915148 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 144 |
Year | 2014 |