Menu
Your Cart

27 நட்சத்திரக் கோயில்கள்

27 நட்சத்திரக் கோயில்கள்
-5 % Out Of Stock
27 நட்சத்திரக் கோயில்கள்
மயன் (ஆசிரியர்)
₹195
₹205
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது! அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் எதையுமே நம்பாமல் இருப்பது சுலபம். ஆனால், அது நமக்கு சாத்தியமில்லை. ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கணிதம். அது நமது புராதன நம்பிக்கைகளுடன் இணைந்து, வளர்ந்து வந்துள்ள ஒரு சாஸ்திரமும் கூட. நம்முடன் இணைந்துள்ள ஒரு சாஸ்திரமாக இருப்பதால், ஜோதிடத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகமாகிறது. நமது சாஸ்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே, இவை எங்குமே முரண்படுவதில்லை. அதனாலேயே சாஸ்திரங்கள், தங்களது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் அதற்குள்ளேயே அடக்கிக் கொண்டுள்ளன. பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் இந்த ‘27 நட்சத்திரக் கோயில்கள்’ புத்தகம் உங்களுக்கு உதவும். உங்களது நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அந்தத் தலத்தின் தல மரம் & அதன் சிறப்பு, அது தொடர்பான தலபுராணக் கதை, அந்தத் தலம் பற்றிய பூகோளத் தகவல், அந்தந்த நட்சத்திரத்துக்கு உரிய மந்திரம் என்று நட்சத்திரம் தொடர்பான அத்தனை தகவல்களையும் நூலாசிரியர் மயன் இந்தப் புத்தகத்தில் துல்லியமாகக் கொடுத்துள்ளார். ஓவியர் ம.செ. வரைந்துள்ள அற்புதமான வண்ண ஓவியங்கள், இந்த நூலுக்குக் கூடுதல் சிறப்பு.
Book Details
Book Title 27 நட்சத்திரக் கோயில்கள் (27 Natchaththira kovilgal)
Author மயன்
ISBN 9788184761320
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 231
Published On Aug 2008
Year 2008
Edition 15
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author