Menu
Your Cart

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள்
-5 %
ஜமீன் கோயில்கள்
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தாமிரபரணி கரை தொடும் கிராமத்தில் பிறந்தவர். நெல்லை மண்ணையும், தாமிரபரணியையும் சுவாசமாக நேசித்து வருபவர். நெல்லை தமிழ்முரசில் ‘நதிக்கரை யோரத்து அற்புதங்கள்’ எனும் தொடரை 5 வருடங்களாகத் தொடர்ந்து எழுதி, அதை ‘தலைத் தாமிரபரணி’ எனும் 1000ம் பக்க நூலாகப் படைத்தவர். ஆரம்பகாலத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றிய இவர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் சொந்தமாக புகைப்பட ஸ்டுடியோ நடத்திவருகிறார். தினகரன் நிருபராகவும் பணியாற்றி வருகிறார். நாவல், சிறுகதை, ஆன்மிகம், வானொலி நாடகம், வரலாறு, சினிமா, சின்னத்திரை என பல தளங்களில் பயணித்துக்கொண்டிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் பலமுறை யாத்திரை மேற்கொண்டவர். ‘சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை’ எனும் இவரது நூல் மிக பிரபலம். ‘அத்ரி மலை யாத்திரை’ தினகரன் ஆன்மிக மலரில் தொடராக வந்து, சூரியன் பதிப்பகம் மூலமாக நூலாக வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. நூல் குறிப்பு: ஜமீன்தார்கள் என்றாலே அவர்களுடைய ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகார தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததை அவர்களுடைய ஆன்மிக நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. தாம் பாரம்பரியமாக வழிபடும் கோயில்கள் மட்டுமல்லாமல், பிற கோயில்களுக்கும் நன்கொடைகள், புனரமைப்பு என்று பல சேவைகளை ஆற்றியிருக்கிறார்கள். இப்போதும் ஜமீன்தார்களின் வாரிசுகள் தம் முன்னோர்களின் அடிச்சுவட்டில் ஆன்மிகப் பணியைச் சற்றும் தொய்வில்லாமல் மேற்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சிறப்பை விளக்குவதுதான் இந்தப் புத்தகம். கோயில்களில் முதல் மரியாதையை ஏற்கும் இந்த ஜமீன்தார்கள் அதற்கான தகுதி படைத்தவர்கள், அந்த அளவுக்கு இறைப்பணி ஆற்றியிருக்கிறார்கள் என்பதை இந்தப் புத்தகத்தில் இழையோட்டமாக உணரமுடியும்..
Book Details
Book Title ஜமீன் கோயில்கள் (Jameen Koyilgal)
Author முத்தாலங்குறிச்சி காமராசு (Muthalankurichi Kamarasu)
ISBN 9789385118913
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2017
Category Hindu | இந்து மதம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு ஒவ்வொரு வழக்கின்போதும் தாம் கண்டு, கேட்டு, உணர்ந்த அனுபவங்கள் நீதியரசர்களை வேள்விக்குள்ளாழ்த்தி நியாயத்தை வெளிக்கொணரச் செய்கின்றன. இந்நிலையில் இவ்வழக்குக்கு கிடைத்த நீதியரசர்கள் பாராட்டுக்குரியவர்கள். மேலும் இவர்களின் கேள்விக் கணைகளின் வாயிலாக ஆதிச்சநல்லூருடன் க..
₹247 ₹260