Menu
Your Cart

காலனியகால மதப்பிரச்சாரத்தில் கிருத்தவர்கள் - இந்துக்கள்

காலனியகால மதப்பிரச்சாரத்தில் கிருத்தவர்கள் - இந்துக்கள்
-5 % Out Of Stock
காலனியகால மதப்பிரச்சாரத்தில் கிருத்தவர்கள் - இந்துக்கள்
மு.வையாபுரி (ஆசிரியர்)
₹95
₹100
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பக்தி இலக்கியங்களும், ஆலயங்களும் வலிமை மிக்க அரண்களாக உள்ள தமிழகத்தில், பிற மதப்பிரசாரத் தாக்குதல்கள், 200 ஆண்டுகளாக நடைபெற்று வருவதை, இந்த நூல் சான்றுகளுடன் ஆவணமாய் காட்டுகிறது. தமிழகம் வந்த கிறிஸ்தவப் பாதிரிகள், அச்சகம் முதன் முதலாக இங்கு தான் நிறுவினர். அதன் வழி கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினர். சிறு நூல்கள் வெளியிட்டனர். பள்ளிகள் துவங்கினர். மருத்துவமனைகள் கட்டினர். இதன் வழி கிறிஸ்தவ சமயத்தை நிலை நாட்டினார் என்பதற்கான ஆதாரங்களை, "உதயதாரகை "பிரம்ம வித்தியா என்ற இரு இதழ்கள் வழியே விளக்குகிறார். கிறிஸ்தவர்களைப் போலவே இஸ்லாமியரும் சிறு பிரசுரங்கள், இதழ்கள் வழியே இஸ்லாத்தைப் பரப்பினர். கிறிஸ்தவப் பாதிரிகளின் பள்ளிகளில் கல்வி கற்பிக்கின்றோம் என்ற பெயரில், இந்துப் பெண் பிள்ளைகளை தொட்டும், கட்டிப்பிடித்தும், முத்தம் கொடுத்தும், புதிய நாகரிக முறைகளைச் சொல்லிக் கொடுத்தும் இந்துக்களின் குடும்பங்களையும், இந்து மதத்தையும் கெடுப்பதாகக் கதறினர். (பக்கம் : 9) 1841ல் உதயதாரகை, இலங்கையிலிருந்து வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகை, தமிழ், ஆங்கில இருமொழி இதழ்கள், இந்து மதத்தைத் தாக்கி, கிறிஸ்தவத்தை பரப்பின. இது பற்றி 19 கட்டுரைகள் உள்ளன. யாழ்ப்பாணத்தில் அச்சாகி வெளிவந்துள்ளது.1886 இல் "பிரம்ம வித்தியா என்றும் தமிழ் - வட கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. கிறிஸ்தவ பிரசாரத்துக்கு, 18 கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. கிறிஸ்தவ பிரசாரத்துக்கு பதிலடி தரும் வகையில், கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பாதிரியார் பாடசாலையில் பெண்களை அனுப்புவதால் நேரிடும் அனர்த்தம், "பேய் வித்தை, "சிவனும் தேவனா? என்னும் தீய நாவுக்கு ஆப்பு ஆகிய கட்டுரைகள் கனல் கக்குகின்றன. மனமாற்றமும், மதமாற்றமும் பற்றிக் கூறும் ஆவண நூல்.
Book Details
Book Title காலனியகால மதப்பிரச்சாரத்தில் கிருத்தவர்கள் - இந்துக்கள் (Coloniya Kaala Mathappirachchaaraththil Christuvargal Hindukkal)
Author மு.வையாபுரி (M.Vaiyapuri)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 156
Category இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha